Viral Video | “பாதுகாப்பு கொடுங்கள்” என்று கோரி காதல் கணவனுடன் பெங்களூரு போலீசில் தஞ்சமடைந்த அமைச்சர் சேகர் பாபு மகள்

எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று கோரி, காதல் கணவனுடன் பெங்களூரு போலீசில் தஞ்சமடைந்த அமைச்சர் சேகர் பாபுவின் மகள்.

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் தன்னுடைய காதலனுடன் திருமணம் செய்துகொண்டு, எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பெங்களூரு போலீசில் தஞ்சமடைந்துள்ளனர்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபுவின் மகள் “நான் ஜெய கல்யாணி அமைச்சர் சேகர் பாபுவின் மகள். இவர் சதீஷ் நாங்கள் இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து வருகிறோம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும் விருப்பப்பட்டுதான் திருமணம் செய்து கொண்டோம் 2021 ஆகஸ்ட் மாதம் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினோம். மூன்று நாட்களுக்குப் பிறகு எங்களை புனேவில் வைத்து பிடித்தனர். பின்னர் அங்கிருந்து இங்கு வரவழைத்து வந்தனர் திருவள்ளூரில் இரண்டு மாதம் வரை சட்டத்திற்குப் புறம்பாக போலீஸ் உதவியுடன் அடைத்து வைத்தனர். இவருடைய பெற்றோர் மற்றும் நண்பர்களை போலீசார் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தினர்.

இதற்கெல்லாம் எங்களிடம் ஆதாரம் உள்ளது ஆகஸ்ட் 18-ஆம் தேதி நாங்கள் இருவரும் மும்பையில் இருந்தோம் அப்போது எனது தந்தை இருவருக்கும் எதிராக எப்ஐஆர் பதிவு செய்தார் இவர் மீது தவறான புகார் அளித்த நிறைய வழக்குகள் பதிவு செய்துள்ளார். அதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளது நாங்கள் மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்ட தற்போது இங்கு வந்து உதவி கோருகிறோம். என்னுடைய தந்தை அமைச்சராக இருப்பதால் தமிழக அரசு அல்லது தமிழகத்தில் உள்ளவர்களும் இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவ முன்வர மாட்டார்கள்.

இதன் காரணமாகத்தான் நாங்கள் கர்நாடகாவிற்கு வந்துள்ளோம், இங்குள்ள அரசிடம் எங்களுக்கு உதவி கோரிக்கை வைக்கிறோம். கர்நாடக போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் கடந்த முறை வீட்டை விட்டு வெளியேறிய போது சதீஷ் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்ய பார்த்தார்கள். அவர் மீது ஏதேனும் வழக்கு பதிவு செய்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என கூறியதால் அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இப்போது நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதால் இனிமேல் இவருடைய குடும்பத்தில் யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது” என்றார்.

Spread the love

Related Posts

இந்த வெயில் காலத்தில் உடல் சூட்டை தடுக்க என்ன வழி

கோடை காலம் ஆரம்பித்த உடனேயே வெயிலின் தாக்கம் அதிகமாகி விடும். இதன் காரணமாக பலருக்கு இயற்கையாகவே

“25 லட்ச மாச சம்பளத்துக்கு மனைவியா கூப்பிட்றாங்க….” விஷால் பட நடிகையின் வருத்தமளிக்கும் மறுபக்கம்

விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த பிரபல ஹீரோயின் நீத்து சந்திரா என்னை 25

எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை தந்துள்ளது

ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் அதிரடி