உத்தரபிரதேசத்தில் காவி உடை அணிந்த சன்னியாசி ஒருவர் இஸ்லாமிய பெண்களை கற்பழித்து விடுவேன் என்று பகிரங்கமாக கூறியிருக்கிறார். அதற்கு அவர்களின் சீடர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டுக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சீதாபுர் ஊரில் உள்ள கிராமத்தில் அமைந்துள்ள ஒரு மசூதி அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு சன்னியாசி ஜீப்பில் வந்திருந்தார். அப்போது அந்த ஜீப்பில் இருந்த ஒலிபெருக்கி மூலம் பேசிய அந்த சன்னியாசி இஸ்லாமிய பெண்கள் குறித்து பல அவதூறான வார்த்தைகளை பேசி இருக்கிறார். இதில் ஒருபடி மேலே போய் அவர்களை பலாத்காரம் செய்ய வேண்டும் எனவும் சர்ச்சைக்குள்ளான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினை அவதூறு வார்த்தைகளில் பேசியதால் கன்னியாகுமரியில் பாஜக பிரமுகர் கைது

மேலும் பேசிய அவர் என்னை கொல்வதற்காக 28 லட்சம் ரூபாய் வரை வசூலித்து இஸ்லாமியர்கள் திட்டமிடுகின்றனர். எங்களின் ஹிந்து பெண்கள் மீது கைவைத்தால் நாங்கள் முஸ்லிம் பெண்களை பகிரங்கமாக கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்வோம் என்று கூறினார். காவி உடை அணிந்த அந்த சன்னியாசி இப்படிக் கூறும்போது வாகனத்திற்கு வெளியே நின்றிருந்த அவர்களின் ஆதரவாளர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டனர். இதனை கண்ட அங்கிருந்த போலீஸ்காரர்களும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இது நடந்து ஐந்து நாட்களுக்கு மேலாகியும் அந்த சீதாபுர் காவல் நிலையம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என பல சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.


மேலும் அந்த வீடியோ எடுக்கும் போது போலீசார் அங்கேயே தான் இருக்கின்றனர். ஆனால் இவரின் சர்ச்சை பேச்சுக்கு அவர்கள் வாயை திறக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். போலீசாக இருந்துகொண்டே இப்படி செய்யலாமா என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக சீதாப்பூர் போலீசார் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கின்றனர். அதில் அவர்கள் இதுதொடர்பாக நடவடிக்கை சீக்கிரமே எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் எந்த அளவிற்கு பெரிதாக வெடிக்கும் என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Here is the full video. It's been more than 5 days. No action against him by Police yet. pic.twitter.com/EP3kkOY6s5
— Mohammed Zubair (@zoo_bear) April 7, 2022