இப்ப நம்ம பாக்க போற படம் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, ராஜ்கிரன், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் நடித்து இன்னைக்கு திரையரங்கில் வெளியாகியிருக்கிற படம் விருமன் இத தான் பார்க்கப்போறோம்.
அம்மா சாவுக்கு காரணம் அப்பாதான்னு தெரிஞ்சு அப்பா மேல பகையை வளர்த்துக்கிட்டு சின்ன வயசிலேயே தன்னுடைய உலகமே இனிமே மாமாதான்னு சொல்லி சின்ன வயசுல இருந்த மாமா ஓட அரவணைப்புல வளருறாரு படத்தோட கதாநாயகன் கார்த்தி. பிறகு அவங்க அப்பாவுக்கும் கார்த்திக்கும் நடக்கிற பிரச்சனைகள் என்னங்கறத சொல்றது தான் திரைக்கதை.
முக்கியமா இதுபோல கதைகள் வெற்றி அடையனும்னா அந்த பேமிலிகுள்ள நடக்குற அந்த எமோஷன் சென்டிமென்ட் நல்லா ஒர்க் அவுட் ஆகணும். பார்க்கிறவங்களுக்கு அந்த எமோஷன் கனெக்ட் ஆகணும். அந்த வகையில பார்த்தா இந்த படத்துல வர சில காட்சிகள் நம்மளால கனெக்ட் பண்ணிக்க முடியுது அந்த எமோஷனும் தெரியுது. ஒரு சில காட்சிகள் எல்லாம் கூட ஒரு நல்ல ஃபேமிலி வேல்யூ இருக்கிற ஒரு படமா தான் இந்த விருமன் இருக்கு.
அடிபம்புடன் சேர்த்து கழிவுநீரை கால்வாய் கட்டப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அதுக்கு பிறகு படத்துல பர்பாமென்ஸ்னு சொல்லணும்னா படம் முழுக்கவே இந்த ஸ்கிரீன் பிரஷன்ஸ் அதாவது தன்னுடைய திரை ஆளுமையால கார்த்தி அவர்கள் ரசிகர்களை கட்டி போடுறாரு. மேலும் முதல் படமாக இருந்தாலும் அதிதி சங்கர் அந்த எண்ணத்தையே வர வைக்காம ஒரு மெச்சூர் ஆர்டிஸ்ட் மாதிரி பர்பாமென்ஸ் பண்ணி இருக்காங்க. பிறகு ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல குடும்ப வில்லன் கதாபாத்திரத்தில பிரகாஷ் ராஜும் அருமையா பண்ணி இருந்தாரு. இவங்கள தவிர்த்து சூரி, ராஜ்கிரன் என்று படத்தில் நடித்தவர்கள் எல்லாருமே ஒரு சிறப்பான பர்பாமன்ஸ் தான் கொடுத்து இருந்தாங்க. யாரையும் குறை சொல்ற அளவுக்கு இல்ல.
இரண்டாவது படத்துடைய மியூசிக்கின் எடுத்துக்கிட்டா அந்த கஞ்சா பூ கண்ணால பாடலும் ஓப்பனிங் பாடலும் கேட்க நல்லாவே இருக்கு. ஒரு சில இடங்களில் பேக்ரவுண்ட் ஸ்கோர் நல்ல இருந்துச்சு. மேலும் சண்டைக் காட்சிகளை கோரியோகிராப் பண்ண விதம் அத கலர்ஃபுல்லா படம் பிடிச்ச கேமரா ஒர்க் இந்த மாதிரி பல டெக்னிக்கல் வொர்க்களும் படத்துல நல்லா இருக்கு.

இதற்கு முன்னாடி முத்தையா எடுத்த சில படங்கள் எப்படி இருக்குமோ அதே மாதிரியான ஒரு சாயலை கொண்ட படம் தான் இதுவும் முத்தையா படங்கள் விரும்பி பார்க்கிறவங்களுக்கு இந்த படம் பிடிக்கும்
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஏன் சென்டர் ஆடியன்ஸ்க்கு பிடிக்குமோ எப்படி இருக்குமோ தெரியல ஆனா பி,சி சென்டர்ல இந்த படம் நின்னு விளையாடுங்கிறதுல எந்த விதமான மாற்று கருத்தும் கிடையாது. ஒரு சில லாஜிக்கல் மிஸ்டேக்ஸ் அப்புறம் சில பார்த்து பழக்கப்பட்ட புளித்துப்போன காட்சிகள் இதெல்லாம் கொஞ்சம் தவிர்த்துட்டு பார்த்தா இந்த படம் ஓரளவுக்கு ஒரு நல்ல படம்னே சொல்லலாம். பேமிலி ஓட பாக்கலாம்.
Kingwoods Rating :- 3/5