விருமன் படம் ஆகஸ்ட் 12ம் தேதி திரைக்கு வர காத்திருந்த நிலையில் தற்போது கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளதால் படம் வெளியாகுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி, சூரி, சங்கரின் மகளான அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் போன்றவர்கள் நடித்து சூர்யாவின் தயாரிப்பில் திரைக்கு வெளிவர காத்திருந்த படம் தான் விருமன். இந்த படத்தில் பார்க்க கார்த்தி அவர்கள் கொம்பன் படத்தில் வருவது போல பருத்திவீரன் படத்தில் வருவது போல இருக்கிறார் என்று ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். அதனால் இந்த படத்திற்கு கார்த்தி ரசிகர்கள் மத்தியிலும் சூரியா ரசிகர்கள் மத்தியிலும் பெரும்பாலான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ஏனென்றால் இந்த படத்தின் டிரைலரும் பாடல்களும் ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது. பருத்திவீரன் கொம்பன் படத்திற்கு பிறகு ஒரு கிராமத்து கதையில் கார்த்தி நடிக்கிறார் என்றதும் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்த நிலையில் தற்போது ஒரு புது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அதன்படி இந்த படத்தின் இணை இயக்குனர் ஒருவர் விரும்ன் படத்தின் கதை தன்னுடையது என்றும், அதனை இயக்குனர் முத்தையா என்னிடம் இருந்து திருடி அதை படமாக எடுத்துவிட்டார் என்றும் எழுத்தாளர் சங்கத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சமாதான பேச்சும் நடைபெற்று வருகிறதாம்.
கடைசி நேரத்தில் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளதால் விரும்ன் படம் திட்டமிட்டபடி வெளியாகும என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பிறகு இதே கார்த்தி முத்தையா கூட்டணியில் 2015 ஆம் ஆண்டு வந்த கொம்பன் படமும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
