நடிகர் சங்க கட்டிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி யின் பெயரை அச்சடிக்க வேண்டும் என நடிகர் விஷால் விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
விஷால் நடிப்பில் வினோத்குமார் இயக்கத்தில் ரமணா மற்றும் நந்தா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் லத்தி. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டு அந்த விழாவினை சிறப்பித்தார்.

நேற்று வெளியான இந்த டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. மேலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார், 9 வயது பையனுக்கு அப்பாவாக இந்த படத்தில் விஷால் வருகிறார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் தமிழ் டீசரை உதயநிதி ஸ்டாலின் தான் நேற்று நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
இளம் நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் தனுஷின் போட்டோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல்
அதை வெளியிட்டு விட்டு மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் விஷால் உடைய நட்பை பற்றி கூறினார். அப்போது குறுக்கிட்ட விஷால் அவர்கள் உதயநிதி பற்றி பேச ஆரம்பித்தார். அப்போது பேசிய அவர் :- “நாங்கள் விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்போம், இப்படிப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடிகர் சங்க கட்டிடத்தில் அய்யா முதல்வர் ஸ்டாலின் பெயரும், உதயநிதி ஸ்டாலின் பெயரும் இடம் பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அது விரைவில் நடக்கும் என்று கூறி இருந்தார்” தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
