VJ சித்ராவின் மரணத்திற்கு அதிமுக பிரமுகர் காரணம் ? | சித்ராவின் கணவர் கொடுத்த மனுவால் தீடீர் திருப்பம் | அமைச்சர் ஜெயக்குமார் என்ன சொல்கிறார் ?

சின்னத்திரை சீரியல் நடிகை vj சித்ரா 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புள்ளது என்று சித்ராவின் கணவர் ஹேம்நாத் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்ட vj சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என சித்ராவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் அவரது கணவரை கைது செய்து விசாரித்தது காவல் துறை. அதன் பிறகு அவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். தற்போது கடந்த மாதம் 25ஆம் தேதி போலீசில் எனது மனைவி சித்திராவின் மறைவுக்கு ஒரு மாபியா கும்பல், போதை கும்பல், அரசியல் படைபலம் கொண்ட ஒரு மிகப்பெரிய சென்னை தொழிலதிபர் தான் உள்ளார் என கூறியுள்ளார்.

விஜய்யின் பீஸ்ட் படத்தால் மார்க்கெட் இழந்த நடிகை ? | தொடர்ந்து அட்டர் பிளாப் படங்களை கொடுத்து வரும் பூஜா

மனைவி மரணத்திற்கு காரணம் அவர் தான் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதை வெளியே சொன்னால் அவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல பயப்படுகின்றனர். நம்மால் அவரை ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் மிகவும் பண பலம் மற்றும் படை பலம் மிக்கவர்கள் என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதன்பின் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்கையில் அவர் கூறியதாவது :- “மறைந்த நடிகை சித்ராவின் மரணத்திற்கு அதிமுக அமைச்சர்கள் யாரும் தொடர்பில்லை, அதனால் நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. மடியில் கனம் இல்லையேல் வழியில் பயமில்லை அதனால் vj சித்ராவின் மரணத்திற்கு யார் காரணம் என்று அவர்களை போலீசார் சீக்கிரம் கண்டு பிடிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

Spread the love

Related Posts

திராவிட மாடல் ஆட்சியில் மாட்டுக்கறி சாப்பிட தடையா ? | சென்னை போலீஸ் போட்ட பதிவால் சர்ச்சை

ட்விட்டரில் பயனாளர் ஒருவர் மாட்டு கறி சாப்பிடுவதாக ஒரு ட்வீட் செய்திருந்தார். அந்த ட்விட்டிற்க்கு கீழே

IPL Auction 2022 | ரபாடா, போல்ட் & கம்மின்ஸ் விலை என்ன

ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம்

சிம்பு எனக்கு லவ் டார்ச்சர் தராரு … | ஆதாரத்துடன் வெளியிட்ட சீரியல் நடிகை

சீரியலில் நடிக்கும் நடிகை ஸ்ரீநிதி தன்னை சிம்பு லவ் டார்ச்சர் செய்கிறார் என ஸ்க்ரீன் ஷாட்டை