Latest News

டி ராஜேந்தர் தற்போதைய நிலை என்ன ? | எதனால் அவருக்கு தீடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது ? | விளக்கமளித்த மருத்துவர்

இயக்குனர் நடிகர் மற்றும் இசை அமைப்பாளருமான பன்முகத் திறமை கொண்ட நடிகர் டி ராஜேந்தர் திடீரென நேற்று நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் நேற்று முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

அவருக்கு வந்திருக்கும் அந்த நெஞ்சு வழியை பற்றி மருத்துவரிடம் கேட்டபோது அவர் கூறியது என்னவென்றால் :- “டி ராஜேந்தர் அவர்களுக்கு இருதய ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது பொதுவாக 40 வயதுக்கு மேலானவர்களுக்கு வரும் ஒரு பிரச்சனை. இந்த பிரச்சனை எதனால் வருகிறது என்றால் நம் ரத்தக்குழாயில் சில அடைப்புகள் ஏற்படலாம். அந்த அடைப்புகள் எவ்வாறு இருக்கும் என்றால் நாம் உண்ணும் உணவில் அதிகம் கொழுப்பு இருந்தால் அந்த கொழுப்பு ரத்தக் குழாயை அடைத்து விடும்.

முக்கியமாக இறைச்சிகள் அதிகம் சாப்பிடும்போது இந்த அடைப்பானது ஏற்படும். அரிசி உணவுகளை உண்ணும்போதும், அதை அதிகமாக உண்ணும் போதும் இம்மாதிரியான விளைவுகள் நமக்கு ஏற்படுகிறது. பொதுவாக அந்த ரத்தக்குழாயில் ரத்தம் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி ரத்தம் ஓட முடியாமல் அடைப்பு ஏற்பட்டால், 50% போகக் கூடிய இடத்தில் 30% ரத்தம் மட்டுமே சென்றால் நமக்கு சில உடல் பாதிப்புகளை அது ஏற்படுத்தும். நம் உடலில் எல்லா பாகங்களுக்கும் ரத்தமானது சப்ளை செய்யப்பட வேண்டும். அப்படி அந்த ரத்தத்தை தடுக்கும் வகையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த பாதிப்புகள் ஏற்படும். அதனால் நாம் உண்ணும் உணவில் கண்ட்ரோலாக இருக்கவேண்டும்” என்கின்றனர் மருத்துவர்கள்.

தற்போது டி ராஜேந்தர் சிகிச்சை பெற்று வந்த பிறகு பழைய நிலைக்குத் திரும்புவாரா என நமக்குள் கேள்வி எழும்பும் அதற்கு மருத்துவர்கல் கூறுவது :- “முன்பு போல அந்த சிகிச்சைக்கு பிறகு இருக்க முடியாது, அதிகமாக உடற்பயிற்சி செய்யவேண்டும், மேலும் உணவுக் கட்டுப்பாடு அறவே கடைபிடிக்கவேண்டும், நடைப்பயிற்சி சென்றாலும் உடலுக்கு நல்லது” என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இது போன்ற நோய்கள் நாம் அதிகமாக உடற்பயிற்சி செய்யாததால் தான் வருகிறது அதனால் உடலுக்கு ஏற்ற உணவையும் உடற்பயிற்சியும் நாம் தொடர்ந்து மேற்கொண்டால் இது போன்ற நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம்” என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

Spread the love

Related Posts

பாக்கெட் மனி மட்டும் ஒரு நாளைக்கு 40 லட்சம் | உண்மையான டாடி’ஸ் லிட்டில் பிரின்சஸ் பற்றி கேள்விபட்டுறீர்களா ?

நியூயார்க்கை சேர்ந்த ஒரு பெண்மணி தன்னுடைய ஒரு நாள் செலவிற்கு 40 லட்சம் செலவு செய்கிறார்

வசீகர முகத்தால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை பூஜாவின் புதிய புகைப்படங்கள்

பீஸ்ட் பட நாயகி பூஜா சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் ரில்ஸ் வீடியோக்களை பதிவேற்றுவது

சொகுசு காருக்கு அபராதம் விதித்ததற்கு எதிராக போடப்பட்ட மனுவை அபிராத்தத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என வரித்துறை நடிகர் விஜய்க்கு செக் வைத்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து