ஆந்திர மாநிலத்தில் தனது இரண்டாவது கல்யாண நாளை கொண்டாட கடற்கரைக்கு கணவனுடன் சென்ற பெண் திடீரென மாயமானதா கடலுக்குள் தேட சுமார் ஒரு கோடி ரூபாயை செலவழித்து கணவனுக்கு பிற்பகுதியில் காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்.
ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் மனைவி ஒருவர் தனது கணவனுடன் இரண்டாவது கல்யாண நாளை கொண்டாடலாம் என விசாகப்பட்டினம் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்த மனைவி திடீரென காணாமல் போனார். இதனால் அவர் கடலில் மூழ்கி இருப்பாரோ என சந்தேகத்தில் கணவன் ரூபாய் ஒரு கோடி செலவில் நேவி, மெரைன், உள்ளிட்ட பல கடற்படை விமானம் மட்டும் கப்பல்களை அனுப்பி மற்றும் மீன்பிடி வீரர்களை அனுப்பி தேடி உள்ளார்.

ஆனால் எங்கு தேடியும் மனைவி கிடைத்த பாடில்லை அதன் பிறகு அந்த மனைவி தனது தந்தைக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில் :- நான் நெல்லூர் சென்று விட்டேன், என்னை தேட வேண்டாம் எனவும் நான் என்னுடைய முன்னாள் காதலனுடன் நெல்லூரில் சந்தோஷமாக இருந்து வருகிறேன்” எனவும் கூறியுள்ளார்.
இதனைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது எந்த சம்பவமும் விசாகப்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஒரு கோடி செலவில் மனைவியை கண்டுபிடிக்க முயற்சித்த அந்த கணவனுக்கு இது மிகுந்த ஏமாற்றம் அளித்திருக்கும் என சமூக வலைத்தளங்களிலும் கூறி வருகின்றனர்.
