வேலை பார்க்கும் இடத்தில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகமடைந்து கணவனின் ஆணுறுப்பு மேல் கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர் தனது மனைவி பிரியாவை கல்யாணம் செய்து 7 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு இரு மகள்களும் உள்ளனர். தங்கராஜ் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் துப்புரவு மேற்பார்வையாளராக பணி செய்து வருகிறார்.

இந்த நிலையில் அங்கு இருக்கும் கணவனின் நடத்தையில் சந்தேகப்பட்ட மனைவி பிரியா கணவனிடம் இடையே ஒரு மாதமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வீடியோ கால் பேசுகிறார் என்பதை அவர் பார்த்துள்ளார். இந்த நிலையில் தனது கணவனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்த மனைவி பிரியா வீட்டில் அவர் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது கொதிக்க கொதிக்க வெந்நீரை எடுத்து அவரின் ஆணுறுப்பிலேயே ஊற்றியுள்ளார்.

அப்போது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தங்கராஜை மீட்டு உடனே மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு முதலுதவி செய்த மருத்துவர்கள் 30 சதவீதம் அதிகமான தீர்க்காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கணவனின் ஆணுறுப்பு மேல் கொதிக்க கொதிக்க வெந்நிறை ஊற்றிய இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.