நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தை முன்னிட்டு தமிழகமெங்கும் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கல்யாண விருந்து கொடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்கள் இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து இன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கோலிவுட் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு முக்கிய நிகழ்வாகும். ஏனென்றால் நயன்தாரா இந்திய அளவில் மதிக்கப்படும் ஒரு பெரிய உச்ச நட்சத்திரமாகம் அவரின் திருமணம் என்றால் அது கண்டிப்பாக ஹாட் நியூஸ் தான்.
நயன்தாரா திருமண நிகழ்வில் மாஸ் என்ட்ரி கொடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

இந்த வகையில் இவர்களது திருமணம் பல சினிமா நட்சத்திரங்கள் முன்னிலையில் இன்று மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் கோலாகலமாக நடந்தது. விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி தங்கள் திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஒரு லட்சம் பேருக்கு இன்று கல்யாண விருந்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது.
ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோவில்களில் இந்த கல்யாண விருந்து வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது இவர்களின் இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இதற்கு முன்னதாக நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி திருமணத்திற்கும் தமிழகம் முழுவதும் 1,000 பேருக்கு உணவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
