நயன்தாராவை திருமணம் செய்த பின்னர் விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்பு பற்றி கூறியுள்ளார்.
விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி இருவருக்கும் சமீபத்தில் தான் திருமணம் முடிந்து கோவில் கோவிலாக சுற்றி வருகின்றனர். தற்போது இருவரும் கேரளத்தில் இருக்கும் நயன்தாராவின் வீட்டிற்கு விருந்திற்காக சென்றுள்ளனர். அங்கு விருந்து முடிந்ததும் நயன்தாரா உடனே சென்னைக்கு திருப்பி ஷூட்டிங் வேலைகளை ஆரம்பிக்கப் போகிறார் என செய்திகள் வந்துள்ளது.

இந்த ஜோடி ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இவர்கள் காதல் வளர தொடங்கியது. தற்போது விக்னேஷ் சிவன் ஒரு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியதாவது போடா போடி படம் தான் எனக்கு முதல் படம் சிம்பு பாடல் வரிகளை எழுதும்போது என்னையும் இரண்டு மூன்று வரிகளில் சேர்த்து எழுதச் சொல்லுவார். அந்த ஒரு நம்பிக்கைதான் என்னை இப்போது இயக்குனரோடு சேர்த்து ஒரு பாடலாசிரியராகவும் வளர்ந்துள்ளது. அவர்கொடுத்த அந்த நம்பிக்கை இன்றுவரை எனக்குள் இருக்கிறது என பதில் கூறினர்.
