ஆஸ்கார் விருது விழாவில் தொகுப்பாளராக இருந்த கிரிஸ் ராக்கை புகழ் பெற்ற நடிகரான வில் ஸ்மித் மேடைக்கு சென்று கன்னத்தில் அறைந்த சம்பவம் தற்போது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்போது கோலாகலமாக நடைபெற்று வரும் ஆஸ்கர் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார் வ்ல்ல ஸ்மித். இந்த நிலையில் விழாவை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நகைச்சுவை நடிகரான கிரிஸ் ராக், சிறந்த ஆவண படத்திற்கான பரிசை வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது கிண்டலான பாணியில் வில் ஸ்மித் மனைவியை அவர் வம்பிழுக்க தொடங்கினார். அவரது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் இறுக்கமாக செதுக்கப்பட்ட முடியை “ஜி.ஐ. ஜேன்” படத்தில் டெமி மூரின் தோற்றத்துடன் ஒப்பிட்டு நகைச்சுவையாக மேடையில் கூறியுள்ளார்.

உடனே தனது இருக்கையை விட்டு எழுந்து மேடைக்கு சென்ற வில் ஸ்மித் அவரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு பிறகு அவர் இருக்கைக்கு வந்து அமர்ந்தார்.

வில் ஸ்மித் திடீரென்று மேடைக்குப் போய் தொகுப்பாளரை அறைந்த அந்த சம்பவத்தை பார்த்ததிலிருந்து அந்த அரங்கமே சற்று அமைதியானது. எதற்கு இவர் திடீரென்று போய் அறைந்தார் என்று பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் அடித்துவிட்டு இருக்கையில் உட்காரும் போது “என் மனைவியை பெயர் சொல்லிக் கூப்பிட வேண்டாம் அவரைப் பற்றி நீ பேசக்கூடாது” என்று கோபத்தில் சிறிது கெட்ட வார்த்தை கலந்து கட்டினார்.
இதை அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் பார்த்துக்கொண்டிருந்தனர் அவர்களின் மனைவிக்கு அலோபீசியா என்று ஒரு நோய் உள்ளது. அந்த நோய் என்பது ஒருவருக்கு வந்துவிட்டால் அவர்களின் உடம்பில் இருந்து திட்டுத் திட்டாக முடி உதிரும். 2018 இல் இருந்தே தனக்கு இந்த நோய் இருப்பதாக அவர் மனைவி அறிவித்தார். தன் காதல் மனைவியின் உடல் குறைகளைப் பற்றி நகைச்சுவையாக அந்த தொகுப்பாளர் கூறியது வில் ஸ்மித்க்கு பிடிக்கவில்லை. அதனால்தான் அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார் என்றும் பலர் கூறுகின்றனர்.
#badboys3 #gijane2 #willsmith #chrisrock #oscars #besttvever
— Guy Springthorpe (the pistol slug) (@GuySpringthorpe) March 28, 2022
Can't believe what I just saw live on screen pic.twitter.com/YiijPRQENt