மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு வயது சிறுவனை பணிப்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் வசித்து வரும் ஒரு தம்பதி தனது இரண்டு வயது மகனைப் பார்த்துக் கொள்ளுமாறு பணிப்பெண்ணிடம் சொல்லி விட்டு சென்றுள்ளனர். காலை பதினோரு மணிக்கெல்லாம் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அலுவலகத்திற்கு அந்த தம்பதி கிளம்பிவிடும். மத்த நேரத்திலெல்லாம் சிறுவனை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அந்த பணிப்பெண்ணுக்கு தான் இருக்கிறது.

இந்த நிலையில் சிறுவனுக்கு திடீரென நோய் வாய்ப்பட்டு அதைத்தொடர்ந்து பெற்றோர் மகனை பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அப்போது சிறுவனை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், இவனுக்குப் உடல் வீக்கமாக இருப்பதாகவும் அவன் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார் எனவும் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட அந்த தம்பதி மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் சோதனை செய்து பார்த்ததில் மகனை அந்த பணிப்பெண் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதில் பதிந்து இருந்தது. இதை கண்டு அந்த தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் மீது காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரை தற்போது கைது செய்து சட்ட பிரிவு 308 கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
जबलपुर से आयीं हैं हैवानियत कि तस्वीर.दो साल के बच्चे की देखरेख के लिए रखी आया मासूम बच्चे के साथ हैवानों जैसा सलूक कर रही थी।पुलिस ने मामला दर्ज कर जेल भेज दिया है. @ABPNews @pankajjha_ @awasthis @ajay_media @AshishSinghLIVE @gyanendrat1 @Manish4all #Jabalpur pic.twitter.com/ZmynrgtxBJ
— Brajesh Rajput (@brajeshabpnews) June 14, 2022