அடுத்தவர் மனைவியை கட்டிபிடித்ததாக திமுக பிரமுகரின் மகன் மீது போலீசில் புகார் | பெரிய இடம் என்பதால் நடிவடிக்கை எடுக்க தயங்கும் போலீஸ் ?

திமுக பிரமுகரின் மகன் ஒருவர் அடுத்தவர் மனைவியை கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள வீரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தான் கரை முருகன். இவர் கட்டட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சண்முகவள்ளி 100 நாள் வேலை செய்து வருகிறார். அப்போது ஜூன் 26 ஆம் தேதி கால்நடைகளை வயலுக்கு ஒட்டி சென்று அவர் அவைகளை ஓட்டி கொண்டு மாலையில் தனியாக வீடு திரும்பி கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் அந்த ஊரை சேர்ந்த திமுகவை சேர்ந்தவரின் மகன் ஹரிகிருஷ்ணன் என்பவர் அந்த பெண்மணியை பின் தொடர்ந்து அவரை கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

திடீரென ஒரு ஆண் பின்னாடி இருந்து கட்டிப்பிடிக்கிறார் என பயத்தில் அலறி அடித்து அந்த பெண் ஓடினார். அதற்குள் ஹரிகிருஷ்ணன் அங்கிருந்து மாயமாகிவிட்டார். இது தொடர்பாக ஹரிகிருஷ்ணனின் தாயார் பாண்டியம்மாளிடம் இதை மறந்து விடு என அவரை மிகவும் தரை குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதனால் ஹரிகிருஷ்ணன் மட்டும் அவரது தாயார் மீது நரிக்குடியை சேர்ந்த சண்முகவள்ளி கற்பழிப்பு முயற்சி, கொலை மிரட்டல் என இரண்டு புகார்களை கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இந்த வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. ஹரிகிருஷ்ணன் மற்றும் அவரது தாயார் கைது செய்யப்படவில்லை. அவர்களுக்கு உள்ள அரசியல் பலத்தை வைத்து தப்பிக்க முயல்கின்றனர். இதனால் உயிருக்கு பயந்து சண்முகவள்ளி தனது தாய் வீட்டிற்கு தஞ்சம் புகுந்துள்ளார். தாய் மற்றும் மகன் மீது கொடுக்கப்பட்ட புகாரை வாபஸ் பெறுமாறு திமுக நிர்வாகிகள் சண்முக வலியை மிரட்டி வருகின்றனர் என கோரியுள்ளார்.

ஏற்கனவே கொடுத்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்பதால் தன் உயிருக்கு பாதுகாப்பு தேவை என போலீசாரிடம் மன்றாடியுள்ளார். தந்தை திமுகவில் ஊராட்சி மன்ற தலைவர் என்பதால் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர் என்று கண்ணீர் மல்க அந்த பெண்மணி கூறியிருக்கிறார். இதனால் போலீஸ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Spread the love

Related Posts

நம் மனித உடலை பற்றி நமக்கே தெரியாத அறிவியல் அதிசயங்கள் எல்லாம் என்னென்ன ? | கண்டிப்பாக நல்ல தகவல்கள், நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

அறிவியல் அதிசயங்கள் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தொகுப்பை தான் இப்பொழுது நாம் காண இருக்கிறோம். நன்கு

பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும் சினிமா நடிகர் | தமிழ் சினிமாவின் நிலை இது தான ?

குக்கூ படத்தில் நடித்த நடிகர் பிளாட்பாரத்தில் பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 2014 ஆம்

Watch Video | சேலத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தின் CCTV வீடியோ வெளியாகி பரபரப்பு | வீடியோ உள்ளே

சேலம் எடப்பாடியில் கல்லூரி பேருந்து மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 40