தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக நபர்களுடன் உடலுறவில் ஈடுபடுவதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது.
இந்த உலகத்தில் ஒரு சில ஆய்வுகளின் முடிவுகள் பல்வேறு உண்மைகளை அப்பட்டமாக அப்படியே போட்டு உடைத்து விடும். இது மாதிரியான சில தரவுகள் பல வகையில் முக்கியமான ஒன்றாகவே கருதப்படும். இப்படி நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஆண்களை விட பெண்களே அதிகமானவர்களுடன் செக்ஸில் ஈடுபடுவதாக ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைத்திருக்கிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடத்தும் குடும்ப நல சுகாதார கணக்கெடுப்பின் ஐந்தாவது சுற்றின் தரவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த கணக்கெடுப்பில் நாம் பார்க்க வேண்டிய சில முக்கியமான தகவல்களும் அதில் வெளியாகி இருக்கின்றது. அதன்படி பார்க்கும்போது இந்தியாவில் 1.1 லட்சம் பெண்களுளிடமும் ஒரு லட்சம் ஆண்களிடமும் அவர்களுடைய பாலியல் உறவு குறித்து கேட்கப்பட்டுள்ளது.
அவர்கள் கொடுத்த பதில்களை வைத்து இந்த தரவரிசை வெளியாகியுள்ளது, அதாவது 11 மாநிலங்களில் பெண்களே ஆண்களை விட அதிக நபர்களுடன் பாலியல் உறவு வைத்துள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையில் இருக்கும் 11 மாநிலங்கள் என்னென்ன என்பது கீழ் வருமாறு
ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், ஜம்மு & காஷ்மீர், லடாக், மத்திய பிரதேஷ், கேரளா, லட்சத்தீவுகள் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு.

இவற்றில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பெண் சராசரியாக மூணுக்கும் மேற்பட்டவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதாக அறிக்கை கூறுகிறது. மேலும் தன்னுடைய மனைவியை விட்டுவிட்டு மற்ற பெண்களுடன் உடலுறவு கொண்டவர்களின் பட்டியலில் பெண்களை விட ஆண்களை அதிகமாக உள்ளனர் என இந்த அறிக்கை கூறுகிறது. அதாவது அந்த லிஸ்டில் ஆண்கள் 4 சதவீதமும் பெண்கள் 0.5 சதவீதம் இருக்கின்றனர்.