4 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் 30 வயது பெண் எட்டாம் வகுப்பு பையனுடன் லார்ஜுக்கு சென்று தங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தான் அதிகம் நாம் பார்த்து வருகிறோம். ஆனால் இந்த சம்பவம் மேலும் பரபரப்பு அடைய செய்துள்ளது. ஆந்திரா மாநிலம் அருகே உள்ள குடிகாடா என்ற பகுதியை சேர்ந்தவர் தான் ஸ்வப்னா. இவருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளது. கடந்த சில நாட்களாக இவருக்கும் இவருடைய கணவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க அவரது எதிர் வீட்டில் இருக்கும் 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுவானுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார் அந்த பெண்.
இவர்களுக்குள் நல்ல பழக்கமும் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி அவரின் வீட்டிற்கு சென்று இந்த சிறுவன் டிவி பார்ப்பது வரை அது சென்றுள்ளது. இதனை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்ட ஸ்வப்னா சிறுவனுக்கு ஆபாச படங்களை காட்டியுள்ளார். மேலும் அவனை அடிக்கடி அழைத்து நெருக்கமாக இருந்துள்ளார். இப்படி பல நாட்களாக இது நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்றது குறித்து போலீஸாருக்கு சிறுவனின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். விசாரணையை தொடங்கிய போலீசார் எதிர் வீட்டில் இருக்கும் ஸ்வப்னாவும் காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது. இதனால் இவர்களை தேடும் பணி தீவிரமாக தொடங்கியது. தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார் ஹைதராபாத்தில் ஒரு லாட்ஜில் இவர்கள் இருவரும் தங்கி இருந்தது தெரிய வந்தது. சிறுவனை பத்திரமாக மீட்டு கவுன்சிலிங் கொடுத்துவிட்டு பெற்றோரிடம் அனுப்பிவிட்டனர். மேலும் அந்த பெண்ணை போக்ஸோ வழக்கில் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களுடைய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
