மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் என்னுடைய கணவன் ஒரு ஆணே கிடையாது என தொடர்ந்துள்ள வழக்கு பீதியை கிளப்பியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் சுடியா என்கிற பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு. கல்யாணம் முடிந்த கையோடு மனைவியை புனேவுக்கு அழைத்து சென்றான் அந்த கணவன். அங்கு சென்று அவர்கள் இரண்டு வருடங்களாக தாம்பத்திய உறவே இல்லாமல் இருந்திருக்கிறார்கள். மனைவி கொஞ்சம் கணவனுக்கு அருகில் சென்றாலும் அவர் கையை எடுத்துவிட்டு வேறு ஒரு அறைக்கு சென்று தாள் போட்டுக் கொள்கிறார் என இப்படியாக மனைவி கூறியிருக்கிறார்.


மேலும் அவர் மீது சற்று சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது அதனால் மறைந்திருந்து அவரின் நடவடிக்கைகளை நோட்டம் விட்ட மனைவி அவர் பெண்களைப்போல பிந்தி, ஹேர் பேண்ட் போன்ற பொருட்களை பயன்படுத்தி தன்னை ஒரு பெண் போல காட்சிப் படுத்திக் கொள்வதை ஒரு நாள் கண்டிருக்கிறார். இதனால் பயந்துபோன அந்த பெண் அங்கிருந்து அவருடைய சொந்த ஊரான இந்தூருக்கு வந்திருக்கின்றார். வந்ததோடு மட்டுமல்லாமல் அங்கிருந்து மகிளா காவல் நிலையத்தில் தனது கணவன், மாமியார், நாத்தனார் மீது புகார் கொடுத்துள்ளார். இவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
மேலும் அந்த குடும்பத்தாரால் இவர் மிகவும் தாக்கப்பட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றி அந்த பெண்ணின் வழக்கறிஞர் கூறுகையில் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரின் அடையாளங்களையும் நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் சமர்ப்பித்திருக்கிறார். இது அவருக்கு முதல் வழக்காகும். பெண்களைப் போலவே தனது கணவரும் மேக்கப் போட்டு கொள்கிறார் என்று அந்த பெண் கூறியுள்ளார். இதுபோன்ற பல ஆண்கள் நம் ஊரில் இருக்கின்றனர், அவர்களை பற்றிய சில போட்டோக்களையும் அவர் நீதிமன்றத்தை பகிர்ந்தார். அதனால் இதை அடுத்து இந்தப் பெண்ணுக்கு அவருடைய கணவர் மாதம் 30 ஆயிரம் பணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

நம்ம ஊரில் வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்ட காஞ்சனா படத்தின் நிகழ்வை போலவே இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.