தான் காதலித்த ஆணை ஒரு பெண் காதலிக்கிறார் என்று தெரிந்ததும் அந்த பெண்ணின் முகத்தில் இன்னொரு பெண் ஆசிட் ஊற்றிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் லேகா நேற்று இவரது வீட்டிற்கு ஐஸ்வர்யா சென்று கதவை தட்டியுள்ளார். அப்போது கதவை திறந்த லேகாவின் முகத்தில் திடீரென ஆசிட் ஊற்றி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார் ஐஸ்வர்யா. ஆசிட் வீசியதில் பலத்த காயமடைந்த லேகாவும் அவரது அம்மாவையும் அக்கம்பக்கத்தினர் கண்டறிந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து போலீஸ் விசாரணையின்போது லேகா என்பவர் பார்த்திபன் என்பவரை காதலித்து வந்துள்ளார். பின் அந்த காதல் முறிந்ததாக தெரிகிறது. அதற்குப் பிறகு ஐஸ்வர்யா பார்த்திபனை காதல் செய்து வந்தார். அந்த கட்டத்தில் ஏற்கனவே காதலித்த லேகா மறுபடியும் பார்த்திபனுடன் தொடர்பில் இருக்கிறார் என்ற விஷயத்தை அறிந்ததும் ஐஸ்வர்யா ஆத்திரமடைந்து தீனதயாளன் அழைத்து அவர் வீட்டிற்கு சென்று அவரின் முகத்தில் ஆசிட் அடித்துள்ளார். அதன் பின் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
