இரண்டாம் உலக போர் முழு கதை – World War II

 • இரண்டாம் உலகப்போர் யார் நில அதிகாரம் உயர்ந்தது என நாடுகளுக்கிடையே தொடங்கிய பிரச்சனை பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த பிறகே முடிந்தது. உலகின் அதிகார வரைபடம் தலைகீழாக மாறியது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் அதிகார பீடமாக உருவெடுத்த நாடுகள்தான், இன்று உலகை ஆளும் சக்திகளாக வலம் வருகின்றன.
 • ஐரோப்பா கண்டத்தில் முதலாம் உலகப் போர் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி, பல்கேரியா, ஓட்டோமான் பேரரசு முதலாம் உலகப் போரில் வீழ்த்தப்பட்டன. பெரிய அளவிலான இழப்புகளை அனைத்து நாடுகளுமே சந்தித்திருந்தனர். எனவே எதிர்காலத்தில் மீண்டும் ஒரு போர் நிகழாமல் தடுக்க 1919 ஆம் ஆண்டு பாரிஸ் அமைதி மாநாட்டில் உலக நாடுகள் சங்கம் உருவாக்கப்பட்டது.
 • நாடுகளுக்கு இடையேயான ஆயுதப் போரை தடுத்து பாதுகாப்பு மற்றும் சர்வதேச மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு உலக நாடுகள் சங்கம் உருவாக்கப்பட்டது. போருக்குப் பின்னரும் அமைதியின்மை நிலவியது. இந்த போர் பல நாடுகளில் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. சில நாடுகளில் இந்த போரால் வரைபடங்களும் மாறின, போருக்குப் பின்னர் கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம் காரணமாக தன்னுடைய 13%சதவீத நிலப்பகுதியை ஜெர்மனி இழக்க நேரிட்டது.
 • பெரிய அளவில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருளாதார இழப்பு அங்கு மக்கள் புரட்சி ஏற்பட காரணமாக இருந்தது இதனால் ஜெர்மானிய பேரரசு வீழ்ந்து ஜனநாயக அரசு உருவானது. அதன் பின்னும் தேசியவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு இடையிலான மோதலால் நாட்டில் பதற்றம் நிலவி வந்தது.
 • 1923ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஆட்சி அமைக்க ஹிட்லர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிய அவர் ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் 1933ஆம் ஆண்டு ஜனநாயக முறையில் ஆட்சியைக் கைப்பற்றிய ஹிட்லர் சிறிது காலத்திற்குள்ளாகவே ஜனநாயகத்தை ஒழித்து சர்வாதிகாரியாக தன்னைப் பிரகடனம் செய்தான். ஹிட்லரின் பல்வேறு நடவடிக்கைகள் அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக இருந்தது, இதேபோன்ற நிலை இத்தாலியிலும் நிலவியது. முதலாம் உலகப் போரின்போது நேச நாடுகள் அணியில் இருந்த இட்டாலி புதிய ரோமானியப் பேரரசை உருவாக்கும் நோக்கத்துடன் அதிகாரத்தை கைப்பற்றிய பெனிட்டோ முசோலினியின் தலைமையை ஏற்றுக் கொண்டது. முசோலினி ஜனநாயகத்தை ஒழித்துவிட்டு இதனை உலகின் மைய அதிகாரமாக மாற்ற பல கொள்கை மாற்றங்களை மேற்கொண்டால் இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த அணியுடனான தன்னுடைய நட்பை வலுப்படுத்த எத்தியோப்பியா மீதான இத்தாலியின் காலணி ஆதிக்கத்திற்கு ஆதரவு அதேநேரத்தில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மனியுடன் சார்பேசில் பகுதி இணைக்கப்பட்டது. இதனால் அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக ஆயுதம் தயாரிப்பதோடு அதிக அளவில் ராணுவத்தில் ஆட்களை சேர்த்தார் ஹிட்லர், அதன் விளைவாக ஐரோப்பிய கண்டத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
 • பிரான்ஸ், இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து ஜெர்மன் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பிரெஷா முன்னணி என்ற அமைப்பை ஏப்ரல் 1935 ஆம் ஆண்டு உருவாக்கியது. அந்த அமைப்பு ஜெர்மனிக்கு எதிராக சில ராணுவ கட்டுப்பாடுகளை விதித்து. ஆனால் அதே ஆண்டு ஜூன் மாதமே அந்தக் கட்டுப்பாடுகள் உடைந்து , இங்கிலாந் தனித்து ஜெர்மன் உடன் கடற்படை தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை முந்தைய கட்டுப்பாடுகள் இல்லாமல் விதித்தது.
 • ஜெர்மனி அதிவேகமாக ராணுவ வளர்ச்சியை அடைந்து வந்தது, கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கத்தோடு ஜெர்மனி செயல்பட்டது. சோவியத் யூனியனுக்கு தலைவலியாக அமைந்தது எனவே சோவியத் அரசு பிரான்சுடன் இணைந்து பிரான்ஸ் சோவியத் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. நாடுகளுக்கு இடையே அமைதியை நிலவச் செய்ய உருவாக்கப்பட்ட உலக நாடுகள் சங்கம் பெயரளவில்தான் செயல்பட்டது. இவை அத்தனையும் கவனித்து அமெரிக்கா முதலாம் உலகப்போரில் பேரிழப்பை சந்தித்ததால், இந்த பிரச்சினைகளில் நடுநிலை வகிப்பது என முடிவெடுத்தது, அதே சமயம் ஆசிய கண்டத்தில் சீனா ஜப்பானுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வந்தது, சீனாவின் கும்மொண்டால் கட்சி பல்வேறு பிரச்சாரங்கள் மூலம் சீன பிராந்தியங்களை ஒன்றிணைத்தது , கும்மோணடாம் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையேயான உள்நாட்டுப் போர் ஜப்பானுக்கு சாதகமாக அமைந்தது , அதன்முலம் சீனாவின் மஞ்சூரியா பகுதியை ஜப்பான் கைப்பற்றியது. உலக நாடுகள் சங்கத்தில் சீனா முறையிட ஜப்பானின் போக்கை உலக நாடுகள் சங்கம் கண்டித்தது. இதனால் அச்சகத்திலிருந்து ஜப்பான் விலகியது .அதன்பின் 1933 ஆம் ஆண்டு தாங்கு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வரை பல களங்களில் இரு நாடுகளும் போரிட்டனர். இருப்பினும் ஜப்பான் ஆக்ரமிப்பு பகுதிகளில் சீன கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது போரிட்டு வந்தனர். இந்த நிலையில் 1936ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மனி இத்தாலி நாடுகளுக்கு இடையே அச்சு நாடுகள் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஒரு மாதம் கழித்து ஜெர்மனி ஜப்பான் இடையே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக அநீட்கோப்பிட்டான் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் சில மாதங்களில் இத்தாலியும் இணைந்து இந்த ஒப்பந்தம் கம்யூனிஸ்ட் கொள்கைக்கு எதிராக இயற்றப்பட்ட இரண்டாம் உலகப்போரின் தொடக்கம் 1939 ஆம் ஆண்டு என சொல்லப்பட்டாலும் அதற்கு முன் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்வுகள் இந்த போருக்கு வித்திட்டது.
 • ஸ்பெயின் உள்நாட்டுப் போரில் தேசியவாதிகளுக்கு ஆதரவாக ஹிட்லர் மற்றும் முசோலினி ராணுவ உதவிகளை செய்தனர். அதே விவகாரத்தில் ஸ்பெயினில் ஆட்சியில் இருந்த ஸ்பானிஷ் ரிபப்லிக் சோவியத் யூனியன் தன்னுடைய ஆதரவு அளித்தது ஜெர்மனியும் சோவியத் யூனியனும் இந்த போரை தங்களது ஆயுத பலம் மற்றும் போர் யுக்திகளை பரிசோதிக்கும் ஒரு களமாக பயன்படுத்திக் கொண்டன, இந்த போரில் ஜெர்மனி இத்தாலி ஆதரவு தேசியவாதிகள் வெற்றி பெற்றனர். தேசியவாதிகளின் தலைவர் பிரான்சிஸ்கோ பிராங்கோ அதிபராக அமரச்செய்தனர். ஸ்பெயின் நடுநிலை வகிப்பதாக கூறப்பட்டாலும், கிழக்கு ஐரோப்பா பிராந்தியத்தில் அச்சு நாடுகளுக்கு ஆதரவாக படைகளை அனுப்பி வைத்தது. ஜப்பான் மற்றும் சோவியத் யூனியன் இடையே எல்லைப் பிரச்சனை தொடர்ந்து இருந்துவந்தது.
 • 1938ஆம் ஆண்டு ஜப்பானிய படைகள் சோவியத் ஒன்றியத்தில் நுழைந்ததால் இரு நாடுகளுக்கிடையே போர் தொடங்கியது. போரின் ஆரம்பத்தில் ஜப்பான் முன்னேறி வந்தாலும் சோவியத் யூனியனிடம் ஜப்பான் வீழ்ச்சியடைந்தது. ஜப்பான் சீன போரில் சோவியத் யூனியனின் தலையீட்டை தவிர்த்திட ஜப்பான் அரசின் ஒரு பிரிவினர் அமைதி உடன்படிக்கைக்கு முன்வந்தனர். அதன் விளைவாக ஜப்பான் சோவியத் உடன்படிக்கை கையெழுத்தானது, அதற்கு பதிலாக ஜப்பான் அரசாங்கம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதிகளில் கவனம் செலுத்த விரும்பியது. அதே நேரத்தில் ஐரோப்பாவில் ஜெர்மனியும் இத்தாலியும் வெளிப்படையாக தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர்.
 • 1938ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டது ஜெர்மனி ஆனால் இதற்கு பிற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்புக்கள் எழவில்லை, இது ஹிட்லருக்கு சாதகமாக அமைந்தது எனவே பூர்வகுடி ஜெர்மானியர்கள் அதிகம் வாழும் செக்கோஸ்லோவாகியா பின்லாந்து பகுதியை ஜெர்மன் உடன் இணைக்க நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார், இதன் பின் வேறு எந்த நிலப்பகுதியும் கோரப்படாத என ஜெர்மனி உறுதி அளித்ததால் செக்கோஸ்லோவாகியா அரசை எதிர்த்த போது ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிற்கு இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, போலந்து , ரோமானியா, கிரீஸ் ஆசிய நாடுகளின் சுதந்திரத்திற்கு இங்கிலாந்தும் பிரான்சும் உறுதி அளித்திருந்த நிலையில் அந்த நாடுகளை ஜேர்மனியும் இத்தாலியும் ஆக்கிரமிக்க முற்பட்ட போது இங்கிலாந்தும் பிரான்சும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றமான நிலை உருவாகி இருந்தது , ஜெர்மனி மற்றும் இத்தாலியின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வந்தது இது இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருப்பை கேள்விக்குறியாக்கி 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஜெர்மனியும் ஸ்லோவா குடியரசும் போலந்து நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது, தாக்குதல் தொடங்கிய இரண்டு நாளில் இங்கிலாந்து பிரான்ஸ் மற்றும் அதன் நேச நாடுகள் ஜெர்மனி மீது போர் பிரகடனம் செய்தன.
 • ஜெர்மனியின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் போரை கட்டுப்படுத்தவும் ஜெர்மனியின் கடல் வழியை முடக்கியது, ஜப்பானுடன் போர் நிறுத்தம் செய்து இருந்த சோவியத் யூனியன் செப்டம்பர் 17ஆம் தேதி போலந்தை தாக்கியது. பல முனைகளிலிருந்து தாக்கப்பட்ட பொலந் சரணடைய மறுத்து நேச நாடுகளின் உதவியோடு நிழல் அரசாங்கம் அமைத்து தொடர்ந்து போரிட்டது. சீனாவிலிருந்து இரும்பு தாது ஏற்றுமதி தடுக்க டென்மார்க் மற்றும் நார்வே ஜெர்மனி 1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஊடுருவியது. டென்மார்கை ஜெர்மனி வெகு எளிதாக கைப்பற்றியது, நேச நாடுகளின் உதவி இருந்தபோதும் நாரதர்ரியாத் ஜெர்மனி படையைச் சமாளிக்க முடியாமல் சரணடைந்தது. நடுநிலை வகித்த ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகவும் போரை தொடங்கிய ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் நாடுகளை கைப்பற்ற நினைத்த அதன் மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு தலைவலி கொடுக்க திட்டமிடப்பட்டது.
 • 1940ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரான்ஸ் நாட்டின் உள் நுழைந்த இத்தாலி பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்தது. ஜெர்மனி மற்றும் இத்தாலி படையைச் சமாளிக்க முடியாமல் பிரான்ஸ் படை வீழ்ந்தது. இரு நாடுகளும் பிரான்ஸை ஆக்கிரமித்தன. ஐரோப்பாவின் பெரும்பான்மை பகுதிகளை ஆக்கிரமித்த நிலையில் பிரிட்டனுக்கு எதிராக தன் படையெடுப்பை ஜூலை தொடக்கத்தில் லுக் டூ கெட் துறைமுகத் தாக்குதலுடன் தொடங்கியது. ஆனால் ஜெர்மானிய போர் விமானங்கள் பிரிட்டன் விமானங்கள் இடம் வீழ்ந்தது. இதனால் போரை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டிய நிலை ஜெர்மனிக்கு உருவானது. நடுநிலை தன்மையுடன் இருக்க அமெரிக்கா முடிவு எடுத்திருந்தாலும் சீனா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக உதவி வந்தது பிரான்ஸ் ஆக்கிரமிப்புக்கு பிறகு இங்கிலாந்து ராணுவ ரீதியாக அமெரிக்க உதவ தொடங்கியது. இதற்கு பெரும்பான்மை அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
 • ராணுவ உதவி செய்யும்போது நாமும் போரில் அங்கம் வகிக்கும் நிலை ஏற்படும் என எதிர்த்தனர் ஆனால் அமெரிக்காவின் உதவி ஜனநாயகத்தை காக்க தேவையாக உள்ளது என அன்றைய அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் தெரிவித்தார் ஜெர்மனிக்கு எதிராக பல நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டது. ஐரோப்பாவில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த எகிப்தை இட்டாலி கைப்பற்றியிருந்தது தன்னுடைய எல்லைகளை விரிவு படுத்த நினைத்த இட்டாலி மேரிடெரியன் கடல் பகுதிகளில் உள்ள வடக்கு ஆப்பிரிக்க நாடுகளை ஆக்கிரமித்த முனைப்பு காட்டியது விரிசுவரை தனது ஆதிக்கத்தைச் செலுத்த நினைத்த இத்தாலியால் அது முடியாமல் போனது இட்டாலி மற்றும் ரோமானிய அரசுகள் இணைந்து ரஷ்யாவில் ஊடுருவத் தொடங்கியது. ஆட்சி நாடுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தம் காரணமாக ஜெர்மனியின் ஆதரவும் இருந்தது சோவியத் யூனியனுடன் ஜெர்மனி போர் நிறுத்த ஒப்பந்தம் செய்திருந்த போதும் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் அரசு இருந்ததை ஹிட்லர் விரும்பவில்லை, எனவே மறைமுகமாக ரஷ்யாவுக்கு எதிராக திட்டங்களை வகுத்து வந்தார்.
 • சோவியத் யூனியனை கைப்பற்ற அச்சு நாடுகள் காட்டிய முலைப்பால் பெரும்பாலான படைகள் சோவியத் யூனியனை நோக்கி நகர்த்தப்பட்டன. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பிரிட்டன் தனக்கான வியூகங்களை வகுக்க தொடங்கியது. போலந்த் ஆக்கிரமிப்பின் போது ஜெர்மனிக்கு உதவிய சோவியத் யூனியனின் அதிபர் ஸ்டாலினுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து 1940ஆம் ஆண்டு ஜூலையில் இங்கிலாந்து மற்றும் சோவியத் யூனியன் இணைந்து ஜெர்மனிக்கு எதிராக இராணுவ உடன்படிக்கை செய்தனர். அதன் பின் தங்கள் அணிக்கு வலு சேர்க்கும் விதமாக மத்திய கிழக்கு நாடுகளான ஈரான் எண்ணெய் வயல்களை கைப்பற்றி ஈரானிய முறையில் தங்களை வலுப்படுத்திக் கொண்டன போரில் பங்கெடுக்காமல் தன்னுடைய ஆதரவு மற்றும் ராணுவத்தை வழங்கி வந்த அமெரிக்கா ஜப்பானுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுக்க வானூர்தி எரிபொருள் வடிவத்தை தடைசெய்தது. இது ஜப்பானுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. பேச்சுவார்த்தைகள் மூலம் ஜப்பான் அமெரிக்கா உறவை மேம்படுத்த முயற்சித்தது. ஆனால் அமெரிக்கா ஜப்பானின் எந்த முயற்சிக்கும் செவிசாய்க்காமல் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து படைகளை பின்வாங்க ஜப்பானை நிர்ப்பந்தித்தது. மேலும் அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து தங்கள் பிரத்யங்களை பாதுகாக்க உடன்படிக்கையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அமெரிக்காவுக்கு எதிராக போருக்கு அபத்தமானது ஜப்பான் தென்கிழக்கு ஆசியா பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து காலனி நாடுகளை நோக்கி போர் தொடுத்த ஜப்பான் 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹவாய் தீவு அருகே உள்ள அமெரிக்கத் துறைமுகமான பெல் பார்பரை தாக்கியது. இந்த தாக்குதல் அமெரிக்காவை இரண்டாம் உலகப் போருக்கு அழைத்து வந்தது, ஜப்பானுக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆயத்தமானது அமெரிக்கா , இங்கிலாந்து ஜப்பான் படைகளை பசிபிக் கடல் பகுதியில் தாக்கி போரிட்டன 1942-43 இடைப்பட்ட காலத்தில் ஆசியா கண்டத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள காலனி நாடுகளை ஜப்பான் படைகள் தொடர்ந்து கைப்பற்றி வந்தது.
 • இந்த நிலையில் இந்திய சீன எல்லைப் பகுதிகளில் ஜப்பான் படைகளை இங்கிலாந்து ஆதிக்கத்தில் இருந்த இந்தியப் படைகள் எதிர்த்தன ஆஸ்திரேலியப் படைகள் யோகினி பகுதியில் போரிட்டன போர் தொடங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே ஜெர்மனி தனது அண்டை நாடுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. போலந்து , நார்வே , நெதர்லாந்து, பெல்ஜியம், லேசம்பேக், பிரான்ஸ் போன்ற நாடுகளும் ஜெர்மனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. போரில் அமெரிக்கா நடுநிலை வகித்த வரை ஜெர்மனி வெற்றிகளிப்பில் இருந்தது, அச்சு நாடுகள் கூட்டமைப்பில் முக்கிய பங்கு வகித்த ஜெர்மனி தன்னுடன் ஒப்பந்தம் ஈட்ட ஜப்பான் மற்றும் இத்தாலியிடம் கூட போர் தாக்குதல் குறித்த செய்தி தெரிவிப்பதில்லை
 • அண்டை நாடுகளை அக்கிரமிப்பதில் ஆர்வம் காட்டிய ஹிட்லர் தன் படைவீரர்களை கவனிக்கத் தவறினார். அவர்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் தொடர்ச்சியான போர் வீரர்களை களைப்பில் ஆழ்த்தியது ஐரோப்பாவின் கடும் குளிரை வீரர்களால் தாங்க முடியவில்லை. இதன் காரணமாக போரில் துவண்டு போயிருந்த ரஷ்ய படைகள் எழுச்சி பெற்றன ஜூலை 1943 ஆம் ஆண்டில் இருந்து ஜெர்மனி கட்டுப்பாட்டில் இருந்த சோவியத் நகரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஸ்டாலின் தலைமையிலான சோவியத் படைகள் வசமாகிவிட்டது. முதலாளித்துவ கொள்கைகளை கொண்ட அமெரிக்கா தன் மீதான ஜப்பானின் தாக்குதல் காரணமாக இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றது.
 • தன் கொள்கைகளுக்கு நேரெதிரான கம்யூனிச கொள்கைகளைக் கொண்ட சோவியத் யூனியனுடன் உடன்படிக்கை செய்துகொண்டு ஆச்சு நாடுகளை எதிர்த்து பசிபிக் கடல் பகுதியில் ஜப்பான் படைகளை வீழ்த்த 1943ஆம் ஆண்டு இறுதியில் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் ஆகியோர் இணைந்து கெய்ரோப்பில் சீனாவைச் சேர்ந்த ஜாந்கி செக்கே சந்தித்து திட்டமிட்டனர். இதன் விளைவாக பசிபிக் கடலில் ஜப்பான் கட்டுப்பாட்டிலிருந்த தீவுகள் மீட்கப்பட்டன. அதைப்போல சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினை ஈரானில் சந்தித்து ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆதிக்கத்தை கட்டுப்படுத்த நேசநாடுகள் சந்தித்து வியூகம் அமைத்தனர். இதன் காரணமாக ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜப்பான் படைகளுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது.
 • இங்கிலாந் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவின் அசாம் எல்லைவரை ஜப்பான் தனது படைகளை முன்னகர்த்தி வந்திருந்தபோது இங்கிலாந்து இந்திய படைகள் ஜப்பான் தாக்குதலை எதிர்த்துப் போரிட்டனர். அதே நேரத்தில் மறுமுனையில் பர்மா பகுதியில் சீனாவின் எதிர்ப்பால் ஜப்பான் தனது படைகளை பின்வாங்கியது, ஆட்சி நாடுகளுடன் ஆரம்பத்திலிருந்து போரிட்டு வந்த இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இணைந்தவுடன் பலம் பெற்றது.
 • ஜெர்மனியின் வெற்றி தடைபட்டுப் போக தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வந்தது நேச நாடுகளின் படைகள் பெரும் முயற்சி எடுக்காமலேயே ஜெர்மனியின் கூட்டுப் படைகளை சுற்றிவளைத்து வெற்றி கண்டது நேச நாடுகளின் முன்னேற்றத்தால் இத்தாலி நாட்டின் படைகள் போரின் போக்கில் தேக்க நிலை காணப்பட்டது.
 • ஜெமினிக்கு முக்கிய நகரங்கள் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றை 1945ஆம் ஆண்டு சோவியத் படைகள் கைப்பற்றின. இந்த காலகட்டத்தில் அமெரிக்க அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் நேச நாடுகளுக்கு மேலும் வலு சேர்த்தது புதிய அதிபராகி ஹரி ட்ரூமன் பதவியேற்றார், முசோலினியின் பாசிசத்திற்கு எதிராக நாட்டில் புரட்சி இயக்கங்கள் உருவாகின. அந்த இயக்கத்தால் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி முசோலினி கொல்லப்பட்டார். இதன் காரணமாக போட்டியிலிருந்து விலகியது இத்தாலி. அனைத்து முனைகளிலும் நேச நாடுகளால் சுற்றிவளைக்கப்பட்ட ஜெயமணி ஏப்ரல் 29ஆம் தேதி சரணடைவதாக ஒப்புக்கொண்டது, அதற்கு அடுத்த நாளே ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார் அதனைத் தொடர்ந்து மே 7-ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி கையெழுத்திடப்பட்டு மே 8ஆம் தேதி செயல்படுத்தப்பட்டதால் ஜெர்மன் படைகள் பின்வாங்கின, ஆட்சி நாடுகளில் இத்தாலி ஜெர்மனி சரண் அடைந்த போதும் ஜப்பான் தொடர்ந்து போரிட்டு வந்தது.
 • 1945ஆம் ஆண்டு தொடக்கத்தில் பிலிப்பீன்ஸ் நாட்டில் அமெரிக்கப் பிலிப்பீன்ஸ் படைகளின் கூட்டு முயற்சியுடன் மற்ற படைகளை வெளியேற்ற கூறப்பட்டது 1945ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவை கைப்பற்ற படைகள் குவிக்கப்பட்டன.
 • மணிலா கைப்பற்றும் வரை சண்டை நடந்து கொண்டிருந்தது இந்த சமயத்தில் இங்கிலாந்து தேர்தலில் இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் தலைவராகக் கருதப்பட்ட வின்ஸ்டன் சர்ச்சில் தோல்வி அடைந்ததால் இங்கிலாந்தின் பிரதமராக கிளமெண்ட் அட்லி தேர்வு செய்யப்பட்டார்.
 • ஜப்பான் நாடு 1945ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுவதை கண்டு அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து ஆகஸ்ட் மாத துவக்கத்தில் ஜப்பான் நாட்டின் மீது போர் தொடுக்க தயாராகின ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரை ஆகஸ்ட் 6ஆம் தேதி லிட்டில் பாய் அணுகுண்டு தாக்கியது. இந்த தாக்குதலில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர், அதிகப்படியான மக்கள் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் இருந்து ஜப்பான் விழுவதற்கு முன்பாக மூன்று தினங்களில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நாகசாகி நகரை பேட்மான் என்ற அணு குண்டுகள் துளைத்தன இந்த குண்டுவெடிப்பில் 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு பெரிய அடியாக இருந்தது அமெரிக்கப் படைகளை சமாளிக்க முடியாத ஜப்பான் போரில் சரணடைந்தது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஜப்பான் போரைவிடுத்து சரணடைய ஒப்புக்கொண்டது, ஆனால் இறுதியாக செப்டம்பர் 2 – 1945 ஆண்டு அமெரிக்க போர்க்கப்பல் யுஎஸ்எஸ் யேசொரிக் கப்பலில் வைத்து சரணடைந்தது. ஜப்பான் சரணடைத்ததுடன் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது 50 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பெருமளவில் பொருட்சேதமும் ஏற்பட்டன. போரின் காரணமாக அனைத்து நாடுகளும் தங்களின் பெரும் செல்வத்தை இழந்து நின்றனர். ஐரோப்பாவில் ஆதிக்கற்றத்திற்க்காக தொடங்கப்பட்ட போர் அதன் வரைபடத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
 • பல நாடுகளில் இந்த போர் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது ஜெர்மனி போருக்குப்பின் இரண்டாகப் பிரிந்தது போலந்து, அங்கேரி, ரோமேனியா, அல்மேனியா போன்ற நாடுகள் சோவியத் ஆதரவு நாடுகளாக மாறின ஆசியாவிலும் பல நாடுகள் ஐரோப்பா அமெரிக்கா காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டன.
 • உலக நாடுகளில் அமைதியை ஏற்படுத்த நேச நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கின, இந்த அமைப்பு உலக நாடுகள் சங்கம் போன்ற பெயரளவிலான அமைப்பாக இல்லாமல் அதிகாரம் பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டது.
 • உலக நாடுகளுக்கு இடையே மனித உரிமையை நிலைநாட்டும் வகையில் உறுப்பு நாடுகளுக்கு பொதுவான கொள்கைகள் வகுக்கப்பட்டன. இதன் நிரந்தர உறுப்பினர்களாக இரண்டாம் உலகப் போரின் சக்திகளாக இருந்த அமெரிக்கா, இங்கிலாந்து, சோவியத் ஒன்றியம் சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அங்கம் வகித்தன. இந்த உறுப்பினர்கள் அடங்கிய ஐநா பாதுகாப்பு மன்றமும் உருவாக்கப்பட்டது. நாடுகளுக்கு இடையே அணு ஆயுதங்களை பயன்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன, இந்தியா உள்ளிட்ட நாடுகள் சுதந்திரம் அடைய காரணமாக இருந்த இந்த போரின் தாக்கத்திற்குப்பின் பல போர்கள் நடைபெற்றிருந்தாலும் தீர்வுக்கான ராஜாங்க ரீதியான பேச்சுக்கள் தீர்வாக இருந்துள்ளது. இவ்வாறாக இரண்டாம் உலக போர் உருவானது. இன்னும் பல தகவல்கள் மற்றும் அறிவுசார்ந்த செய்திகளை பெற தொடர்ந்து இணைந்திருங்கள்.
Spread the love

Related Posts

“அரசியல்வாதிக்கும் அரசு அதிகாரிக்கும் பொது மக்கள்தான் எஜமானர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது” – ஸ்டாலின் கோரிக்கை

தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது தமிழக மாவட்ட ஆட்சியாளர்கள் கூட்டத்தில் அரசியல்வாதிகளின் பணிகளைப் பற்றியும் அரசு

“நீட் தேர்வு கட்டாயமாக நடைபெறும், பொய் பேசி ட்ராமா நடத்துகிறார் ஸ்டாலின்” – அண்ணாமலை அதிரடி

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பாஜக மாநில

“காமெடி நடிகர் போண்டா மணியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்” – மா சுப்ரமணியம்

காமெடி நடிகர் போண்டா மணிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டதாகவும், அவருக்கு உதவ முன் வர

x