அமிட்ஷா வருகை விஜய்க்கு வந்த தலைவலி.. கூட்டணி பெரிய மாற்றம் சில மாதங்களில் நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக தலைமையில் கூட்டணியில் உள்ள பாஜகவும், வாக்குச்சாவடி அடிப்படையிலான பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மண்டலம் வாரியாக பூத் கமிட்டி கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடக்கமாக இன்று மாலை திருநெல்வேலியில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய ஐந்து மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்வது முக்கிய சிறப்பாகும். அவர் இன்று கொச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, பிற்பகலில் தூத்துக்குடிக்கு வருகை தருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தரையிறங்கி, பின்னர் நெல்லையில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் இல்லத்திற்கு சென்று சந்திக்கிறார். அதைத்தொடர்ந்து, மாலை 3.23 மணியளவில் வாகனத்தில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்று, பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் உரையாற்ற உள்ளார்.
அமித்ஷா சுமார் ஒரு மணி நேரம் கூட்டத்தில் பேசுவார் எனவும், அதன்பிறகு பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன், எச். ராஜா, அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
அமிட்ஷா வருகை விஜய்க்கு வந்த தலைவலி.. கூட்டணி பெரிய மாற்றம்
அமித்ஷா வருகையையொட்டி 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், திமுகவுக்கு எதிராக கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளது. இதேசமயம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முன்னதாக ஓ. பன்னீர் செல்வம் விலகிய நிலையில், அமமுக தலைவர் டி.டி.வி. தினகரனும் விலகும் நிலை உருவாகியுள்ளது. இத்தொடர்பாகவும் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்துவார் என அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன.
விஜய்யை கூட்டணிக்கு அழைக்க பல்வேறு முயற்சிகளை பாஜக மற்றும் அதிமுக முயன்றுவருகிறது என்றாலும் நேற்று நடந்த விஜய் மாநாடு விஜய் பேசியது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.. விஜய்க்கு கூடிய கூட்டம் பார்த்து பல காட்சிகள் தூக்கத்தை இழந்தது என்று கூறலாம் இப்படிப்பட்ட சூழலில் இது வேலைக்குஆகாது என்று பாஜக பல திட்டங்களை இப்பொது மாற்றியுள்ளது இதனால் அமிட்ஷா தமிழம் வந்திருக்கிறார் இன்று இரவு பல தேர்தல் வியூகங்கள் மாற்றங்கள் ஏற்பட்டு திமுகவை ஒழிக்க கூட்டணியை பலப்படுத்த அதிமுக பாஜக விரும்புகிறதாம்.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்