KingwoodsNews Logo

📂 பகுப்புகள்

🔴 Live 🔹 பிறர் கண்களை பார்த்து பேசினால் கர்மா Transfer ஆகுமா🔹 விஜய் திமுகவை எதிர்த்தால் விசிக தாண்டி தான் போகணும் யாராகஇருந்தாலும்🔹 விஜய் மாநாடு டம்மி – என் மாநாடு இந்த உலகமே பாக்கபோகுது.. சீமான் சொன்ன முக்கிய தகவல்🔹 விஜயகாந்த் முன்னாடி என் மகன் விஜய் ஒருஆளே இல்ல அவன் டம்மி.. உடைத்த SAC நடந்தது இதுதான்..🔹 உதயநிதி பதவிக்கு சிக்கல் அடிமடியில் கைவைத்த அமிட்ஷா என்ன நடந்தது..🔹 அமிட்ஷா வருகை விஜய்க்கு வந்த தலைவலி.. கூட்டணி பெரிய மாற்றம்🔹 விஜய் மாநாடு கூட்டத்தால் ஆடிப்போன திமுக என்ன நடந்தது தெரியுமா..!🔹 விஜய்க்கு எதிராக சட்டமன்றத் தேர்தலில் போட்டியில்லை – சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம்?🔹 விஜயகாந்தை காப்பி அடிக்கும் விஜய் – பிரேமலதா கொடுத்த ஷாக் பதில்🔹 திமுக 4 வருட ஆட்சியில் ஈர்த்த முதலீடு ரூ.11 லட்சம் கோடி மேல் எப்படி தெரியுமா..?

ஹவுஸ்மேட்ஸ் விமர்சனம்: ஒரு வீட்டின் கதவுகளைத் திறந்தால் வெளிவரும் பயமும் விஞ்ஞானமும்!

ஹவுஸ்மேட்ஸ்’ ஒரு சாதாரண படம் இல்லை. இது ஒரு குழப்பம் தரும் பயமும், சிந்தனையை தூண்டும் விஞ்ஞானமும் கலந்து இருக்கும் முயற்சி

ஹவுஸ்மேட்ஸ் விமர்சனம்: ஒரு வீட்டின் கதவுகளைத் திறந்தால் வெளிவரும் பயமும் விஞ்ஞானமும்! படங்களில் பேய்களை பாத்திருப்போம். சில பலன்களே பேய்களாக இருக்கின்றன, ஆனால் அந்த இரண்டுக்கும் மத்தியில் மனதை குழப்பும் வகையில் ஒரூ திரைப்படம் தான் ‘ஹவுஸ்மேட்ஸ்’. இயக்குநர் ராஜவேல் எடுத்துள்ள இந்த புதிய முயற்சி, தமிழ்சினிமா பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைகிறது. சமீபத்திய தமிழ் ஹாரர் படங்களை போலவே தொடங்கும் இந்த கதை, ‘இதுவும் அந்த மாதிரியான பேய் படம் தானா?’ என்ற எண்ணத்தில் நம்மை மூழ்கவைக்கிறது. ஆனால், கதை நகர்ந்துக்கொண்டே போகும்போது, நம் எதிர்பார்ப்புகளைத் தாண்டி ஒரு அறிவியல் புள்ளியில் கதை முடிகிறது என்பது தான் இதில் நம் பாராட்டுக்களைத் தேட வேண்டிய முக்கிய இடம்.

கதை சுருக்கம் – வீடு வாங்கும் ஒரு காதல்… ஆனால் அதில் யாரோ இருக்கிறார்!

ஹவுஸ்மேட்ஸ் படம் பார்த்த நமது kingwoodsnews செய்தியாளர் விமர்சனம் பற்றி இப்பொது பாப்போம் தர்ஷன் கதையின் நாயகன். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன். ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் அவளது தந்தை ஒரு சிம்பிள் கேள்வி கேட்கிறார் – “சொந்த வீடு இல்லாதவனுக்கு என் மகளை என்னால கொடுக்க முடியாது!”அதனால், தான் சம்பாதித்த பணத்தில் second-hand flat ஒன்றை வாங்குகிறார் நாயகன். அந்த வீட்டில் தான் திருமணத்திற்குப் பிறகு புதிய வாழ்க்கையை தொடங்குகிறார். ஆனால் அந்த வீடு வெறும் கட்டிடம் அல்ல. சில விசித்திரமான சம்பவங்கள், ஒலி, காட்சிகள், ஒரு விதமான தூக்கமின்மை, எல்லாம் நாயகனின் வாழ்க்கையை குழப்பத் தொடங்குகிறது. அதே கட்டிடத்தில் குடியேறும் இன்னொரு தம்பதியாக காளி வெங்கட் – வினோதினி இருக்கின்றனர். அவர்களும் தங்கள் பிள்ளையுடன் அந்த அனுபவங்களை எதிர்கொள்கின்றனர். இந்த இரு குடும்பங்களும் சந்திக்கின்ற மர்மம் என்ன? இது ஒரு பேய் விளையாட்டு தான் என நினைக்கிற நேரத்தில், கதை ஒரு science fiction கோணத்தை எடுத்து செயற்கை நுண்ணறிவும், மனித மனதில் நிகழும் மர்ம நிகழ்வுகளும் கலந்து ஒரு புதிய நிலையை உருவாக்குகிறது.

நடிகை மீனாவுக்கு Yes.. ஓ.பன்னீர் செல்வத்துக்கு NO.. விரட்டிய நைனார் நாகேந்திரன் அதிர்ச்சி பின்னணி..!

ஹவுஸ்மேட்ஸ் விமர்சனம்: ஒரு வீட்டின் கதவுகளைத் திறந்தால் வெளிவரும் பயமும் விஞ்ஞானமும்!

காளி வெங்கட் எப்போதும் போல் இந்த படத்திலும் இயல்பான நடிப்பைத் திறம்படச் செய்து இருக்கிறார். தனது குடும்பத்தின் மீது காட்டும் பாசம், பயம், குழப்பம் — எல்லாவற்றையும் சுத்தமான முறைப்படி காட்டுகிறார். அவருடன் இணைந்து நடித்த வினோதினியும் உணர்ச்சிப்பூர்வமாக நடித்துள்ளார். தர்ஷன் கதையின் நாயகனாக இருந்தாலும், சில முக்கியமான இடங்களில் அவரது நடிப்பில் வலிமை குறைவாகவே தோன்றுகிறது. ஆரம்பத்தில் சில இடங்களில் அவர் ‘camera-facing actor’ போலவே இருந்து விடுகிறார். அர்ஷா பைஜு, நாயகியாய் இப்படத்தில் பயந்த முகபாவனைகளால் கவனம் ஈர்க்கிறார். ஆனால் பல இடங்களில் அவருடைய பாத்திரம் ஒரே மாதிரி expressions-லாகவே தொடர்கிறது என்பது குறிக்கத்தக்கது.

தொழில்நுட்பம் – சிறிய பட்ஜெட்டில் பெரிய முயற்சி

CGI பெரிதாக பயன்படுத்தப்படவில்லை. ஆனால், ஒளிப்பதிவாளரின் வேலை, பசுமை கலந்த காட்சிகள், மாறும் விளக்குகள், shadow play – இவையெல்லாம் ஹாரர் அனுபவத்தை இயல்பாக உருவாக்குகின்றன. சத்த ஒலிப்பதிவு (Sound Design) சில இடங்களில் goosebumps தருகிறது. இயக்குநர் ராஜவேல், ஒரு கடினமான விஷயத்தை – அதாவது ஹாரர் மற்றும் சைஃபை இரண்டையும் பிணைத்துக் கூறும் கதை – எளிதாக சொல்ல முயன்றிருக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றுள்ளாரா என்றால், முழுமையாக இல்லை. ஆனால் ஒரு bold attempt எனக் கூறலாம்.

படத்திலுள்ள பாசிட்டிவ் : புதுமையான திரைக்கதை கோணம், காளி வெங்கட் – வினோதினியின் பாசப்பூர்வமான நடிப்பு, குறைந்த செலவில் மெருகேற்றப்பட்ட தொழில்நுட்பம், கிளைமாக்ஸ் கட்டமைப்பில் ஒரு உணர்ச்சி தட்டும் முடிவு

படத்திலுள்ள நெகட்டிவ் : தர்ஷன் மற்றும் அர்ஷாவின் சில இடங்களில் ஸ்கிரீன் பிரஸன்ஸ் தாக்கம் இல்லாதது, ஆரம்பத்தில் கூடவே இழுத்து செல்லும் ரிபீட்டான காமெடி ட்ராக்கள், சில இடங்களில் சைஃபை விஷயங்கள் நிறைய சொல்ல முடியாமல் போனது போல தோன்றும்

முடிவுரை – இது பேய் படம் இல்ல, மாறி வந்த உண்மை படம்!

ஹவுஸ்மேட்ஸ்’ ஒரு சாதாரண படம் இல்லை. இது ஒரு குழப்பம் தரும் பயமும், சிந்தனையை தூண்டும் விஞ்ஞானமும் கலந்து இருக்கும் முயற்சி. முழுவதும் சிறப்பாக அமைந்ததா? இல்லை. ஆனால், பார்க்கும்போது, “இதுக்கு முன் இப்படிச் செய்ததுண்டா?” என்பதற்கான பதிலைத் தரும் முயற்சி இது. வித்தியாசமான படங்களை ரசிக்கிறீர்கள் என்றால், இந்த படம் ஒரு முறை பார்க்கத்தக்கது.

Rating: 3.25 / 5

Viewed:

மேலும் பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள

📢 23,000 subscribers

கருத்துகள்

இதுவரை கருத்துகள் இல்லை. உங்கள் கருத்தை பதிவு செய்யவும்!

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்