மொபைல் போனுக்கு அடிமையான குழந்தைகள் – பெற்றோர்கள் தவறும், தீர்வும் Dr. பாஸ்கர பிரபு விளக்கம் இந்த டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகளை வளர்ப்பது மிக சிரமமாக இருக்கிறது அனைத்து பெற்றோர்களும் குழந்தைகள் சாப்பிடவில்லை தூங்கவில்லை அடம்பிடிக்கிறது என்று இங்கேயும் என்னால் நடமாடமுடியவில்லை என்னால் உட்கார முடியவில்லை. ஒருவேளை கூட செய்ய முடியவில்லை ஏனெனில் குழந்தை அடம் பிடிக்கிறது என்று தங்களாகவே மொபைல் போனை குழந்தைகள் கையில் கொடுக்கிறார்கள் அந்த குழந்தை நாளடைவில் அந்த மொபைல் போனுக்கு அடிமையாகிவிடுகிறது பின்னர் அந்த குழந்தை மொபைல் இல்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்வதில்லை சாப்பிடவும் மொபைல் போன் வேண்டும் விளையாடவும் மொபைல் போன் வேண்டும் தூங்கவும் மொபைல் போன் வேண்டும் என்ற நிலைமைக்கு அந்த குழந்தையை தாய் தந்தையே ஆளாக்குகின்றனர்.
இவ்வாறு மொபைல் போனுக்கு அடிக்ட் ஆன குழந்தைகளை எவ்வாறு மாற்றுப்பாதையில் மாற்றுவது அவர்களை எவ்வாறு திருத்துவது எவ்வாறு கண்ட்ரோல் செய்வது குழந்தைகள் தாய் வயிற்றில் கர்ப்பமாக இருக்கும்போதே எவ்வாறு ஒரு குழந்தையை பெற்றெடுத்தவுடன் நல்வழியில் வளர்ப்பது என பல சந்தேகங்கள் இருக்கும் இதனை பற்றி தெளிவாக விளக்க குழந்தைகள் நல மருத்துவர் (Paediatrician) dr.பாஸ்கரப்பிரபு kingwoodsnews-க்கு பிரத்யேக பேட்டியளித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது குழந்தைகள் பிறந்தவுடனேயே அனைத்தும் கற்றுக் கொள்வதில்லை தாய் தந்தையரிடமும் சமூகம் மற்றும் நண்பர்கள் இடமும் தான் அனைத்தும் கற்றுக் கொள்கின்றனர். அவர்கள் பிறப்பிலிருந்து மொபைல் போனுடன் பிறக்கவில்லை ஆனால் தாய் தந்தையர் தான் அந்த மொபைல் போனை அவர்களுக்கு அறிமுகம் செய்கின்றனர் முதலில் மொபைல் போன் குழந்தைகள் முன்பு தாய் தந்தையர் உபயோகிப்பதை நிறுத்த வேண்டும் தாய் தந்தை உபயோகித்தால் நிச்சயமாக குழந்தை அதையே தான் செய்யும்.
தாய் தந்தையர் புத்தகம் எடுத்துக்கொண்டு படித்தால் அல்லது படிப்பது போல் நடித்தாலே போதும் அந்த குழந்தையும் புத்தகத்தை எடுத்து படிக்கும், குழந்தைகளுக்கு பகவத் கீதை ராமாயணம் என பல புனித நூல்கள் உள்ளன அந்த புனித நூல்களை படித்தாலும் அந்த குழந்தையும் அதையே செய்யும் பக்தியுடன் அக்குழந்தைக்கு ஆன்மீகம் கல்வி அன்பு பாசம் என பல நல்ல வழிகள் உள்ளன அந்த நல்ல வழிகளை தினம்தோறும் தாயும் தந்தையும் உணவோடு சேர்த்து ஊட்ட வேண்டும் உணவு எவ்வாறு குழந்தைக்கு தேவையோ அதுபோல இத்தகு புனிதமான ஒரு அறிவும் அக்குழந்தைக்கு தேவை அறிவும் தாய் தந்தையர் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்து அக்குழந்தையின் வளர்ச்சி நற்குணமும் அமைந்திருக்கிறது குழந்தைகள் முன்பாக தாய் தந்தையர் சண்டையிடக்கூடாது போட்டி பொறாமை படக்கூடாது இருவரும் ஓரிடத்தில் உட்கார்ந்து இருவரும் ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்து டிசிபிளைனாக வாழவேண்டும் அல்லது குழந்தைகளுக்காக நடிக்கவாவது முயற்சிக்கவேண்டும்.
மொபைல் போனுக்கு அடிமையான குழந்தைகள் – பெற்றோர்கள் தவறும், தீர்வும் | Dr. பாஸ்கர பிரபு விளக்கம்
பல குழந்தைகளின் மனநிலை நான் ஆராய்ந்ததில் பல குழந்தைகள் தாய் தந்தையர் சண்டையிடுவதை பார்த்து குழந்தையின் மனநிலையானது மிக வேகமாக பாதிப்படைவதை நான் கண்டறிந்தேன். தாய் தந்தையர் மொபைல் யூஸ் செய்வதை பார்த்து குழந்தைகளும் யூஸ் செய்கின்றன தாய் தந்தையர் சண்டையிடுவதை பார்த்து குழந்தைகளும் சண்டையிடுகின்றனர் தாய் தந்தையர் பொய் சொல்வதை பார்த்து குழந்தைகளும் பொய் சொல்கின்றன இவ்வாறு அனைத்தையும் தாய் தந்தையரிடம் இருந்துதான் குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர் அப்பொழுது குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே நல்ல புனித நூல்களைப் படிக்க வேண்டும் பகவத் கீதை ராமாயணம் ஸ்ரீமத் பாகவதம் அரிவம்சம் எனும் பல புனித நூல்கள் இந்து நூல்கள் உள்ளன தாய் கர்பமாக இருக்கும்போது சாந்தமாக அமர்ந்து புனித நூல்களை படித்தால் அக்குழந்தைக்கு அக்குழந்தை பிறக்கும் பொழுது நல்ல அறிவுடனும் நல்ல பக்தியுடனும் பிறக்கும் நாம் கேள்விப்பட்டிருப்போம் அண்மையில் வெளியாகிய மகா அவதார் நரசிம்மா படம் வெளியாகி 100 கோடியை கடந்து வசூல் செய்து கொண்டிருக்கிறது அதில் ஒரு ராட்சசன் இரண்யகசிபு அவர் இறக்கமே இல்லாத ஒரு கொடூர ராட்சசன் அவருக்கு பிறந்த குழந்தையாகவும் தர்மமாகவும் இருந்தது அது எப்படி அவரது தாய் வயிற்றில் கர்ப்பமாக இருக்கும் பொழுது அவர்களுக்கு பக்தியை ஊட்டுவார்கள் தனது தாய் அன்பாகவும் அமைதியாகவும் அமர்ந்து அக்குழந்தைக்கு நொடிப்பொழுதும் பக்தியாக ஹரியின் கதைகளையும் விஷ்ணு பகவானின் கதைகளையும் கீர்த்தனங்களையும் பாடல்களையும் மந்திரங்களையும் கேட்டு படித்து உணர்வார்கள் நாரதர் கூற அனைத்தையும் கேட்பார்கள் பார்ப்பார்கள் இவ்வாறு பக்தியுடன் ஒரு தாய் செய்த அனைத்தையும் குழந்தை பிறந்ததும் அக்குழந்தை நல்ல குழந்தையாகவே வளர்ந்தது ராட்சசன் குழந்தை நேரடியாக பரமாத்மாவையே பார்க்கும் வல்லமையும் பெற்று இருந்தது அவ்வகையாக ஒவ்வொரு தாயும் தன் தாய் தந்தையரும் தன் குழந்தைகளை வளர்ப்பதில் மிகவும் எவ்வளவு அறிவுடன் செயல்பட வேண்டுமோ அவ்வளவு அறிவுடன் செயல்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு நல்லது கேட்டதை பிரித்து பார்க்கும் தன்மையை வளர்க்கவேண்டும் அன்னப்பறவை பாலில் கலந்துள்ள தண்ணீரை விடுத்து பாலை அருந்துமோ அதுபோல கெட்டவைகளையும் நல்லவைகளையும் பகுத்தறிந்து நல்லவைகளை எடுத்துக் கொள்ளும் திறனை அவர்களுக்குள் ஊட்டி வளர்த்தல் தாய் தந்தையரின் பொறுப்பே ஆகும்.
குழந்தைகளை மொபைல் போன் பார்ப்பதிலிருந்து விலக்கி வைப்பது எப்படி :
குழந்தைகள் முன்னிலையில் தாய் தந்தையர் மொபைல் போன் பார்க்கக் கூடாது மொபைல் போன் பேசவே கூடாது இவை தலைமறைவாக இருக்க வேண்டும் அனைத்தும் இவ்வாறு செய்தால் அந்த குழந்தை மொபைல் போன் இருப்பதையே மறந்து விடும் அப்ப குழந்தை வளர வளர குழந்தைக்கு மொபைல் போன் பற்றிய பற்று குறைந்து மூளையும் சுறுசுறுப்பாக வேலை செய்யும் விளையாட்டில் கவனம் செலுத்தும் படிப்பில் கவனம் செலுத்தும் இதுவே குழந்தைக்கு போதுமானதாகும்
ஏற்கனவே மொபைல் போன் கொடுத்து விட்டேன் மொபைல் போனுக்கு அடிமையாகிவிட்ட அவர்களை அதற்கு ஒரு கால அளவை செட் செய்யுங்கள் தினமும் இத்தனை மணி நேரம் பள்ளியிலிருந்து வந்தவுடன் ஒரு மணி நேரம் மொபைல் பார் என்று முதலில் ஆரம்பித்து அதனை பாதி நேரம் குறைத்து பத்து நிமிடம் பார் என்று குறைக்க வேண்டும் அவர்களுக்கு ஆக்டிவிட்டி போன்ற கேம்களை உருவாக்கி தாங்களும் விளையாட வேண்டும் தாய் தந்தையரும் விளையாட வேண்டும் இவ்வாறு தாய் தந்தையர் குழந்தைகளோடு விளையாடும் பொழுது மூளையும் சுறுசுறுப்படைந்து ஆரோக்கியமும் அதிகரிக்கிறது அதனால் குழந்தைகளின் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது தாய் தந்தையின் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.
மும்பையிலிருந்து தமிழகத்துக்குள் பரவும் காற்று மாசு, வாழ தகுதியற்ற மாநிலமாக மாறும்..!
குழந்தைகளுக்கு வெளியில் கூட்டி செல்வது அதீதமாக அடம் பிடிக்கும் குழந்தைகளை மொபைல் போன் காட்டாமல் அவர்களுக்கு உற்சாகமூட்டும் கதைகளை கூறுவது அவர்களை சுற்றுலா கூட்டிச் செல்வது அவர்கள் முன்பு நீங்கள் மொபைலை வெறுப்பது போல நடிப்பது. மாறாக அவர்களை பயமுறுத்துவது அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது நல்ல விஷயங்களை மொபைல் கொடுத்து அன்பாகவே அவர்களை மாற்ற முயற்சிக்க வேண்டும் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் ஒரு குழந்தை மொபைல் பார்க்கிறது என்றால் அதனை 4 மணி நேரமாக குறைக்க வேண்டும் முதல் மாதம் பிறகு இரண்டாவது மாதம் அதை 3 மணி நேரம் என இவ்வாறு குறைத்துக் கொண்டே வந்து முழுவதுமாக மொபைல் ஃபோனை அந்த குழந்தை மறந்து விடும் அளவிற்கு தாங்கள் நல்வழியில் செய்ய வேண்டும் கொடுமைப்படுத்தக்கூடாது நல்ல கதைகளை அவர்களுக்கு நீங்கள் கூற வேண்டும் ஹரிகதைகளை கூற வேண்டும் கிருஷ்ணரின் கதைகளை கூற வேண்டும் எவ்வாறு குழந்தைகள் கதைகளை கேட்க கேட்க பக்தியுடனும் இருக்கும் இதை மூடநம்பிக்கை என்று ஒதுக்க கூடாது இதில் உண்மை தன்மை அடங்கியுள்ளது.
அவரவர் குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் என்ன திறமை உள்ளது என்று தெரிந்துகொண்டு அந்த குழந்தைகளுக்கு பயிற்சியளித்தல் நல்லமுறையில் வளரும் இதையும் மீறி குழந்தைகள் அடம்பிடிக்கிறார்கள் என்றால் நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்