KingwoodsNews Logo

📂 பகுப்புகள்

🔴 Live 🔹 ஜனவரி 2026 ராசிபலன்.. 12 ராசிகளுக்கு அதிருஷ்டம் யாருக்கு..🔹 உலகத்தை ஆளப்போகும் AI தொழில்நுட்பம்.. இனி வேலைக்குபோக தேவையில்லை🔹 Elon Musk மனிதன் இல்ல ஏலியன், 54 லட்சம் கோடி சொத்து ப்பா உலகத்தையே வாங்கிடுவாரு..!🔹 STR 51 அப்டேட் கொடுத்த இயக்குனர்.. சூப்பர் ஹீட் அடிக்க காத்திருக்கு🔹 சிந்து நதி நீர் வேணும் இந்தியாவிடம் கெஞ்சிய ஷெரீப்.. கண்டும்காணாமல் இருந்த உலக தலைவர்கள்🔹 பூமியை நெருங்கும் ஏலியன்கள், பாபா வாங்கா கணிப்பு மிஸ் ஆகாது…!🔹 எடப்பாடி தான் முதல்வர், ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் நொந்துட்டாங்க🔹 தமிழகத்தில் MBBS இடங்கள் அதிகரிப்பு ஆய்வில் – சேர்க்கை தாமதம்🔹 விஜய் சினிமாக்காரன் அவனுக்கு ஏன் இந்த வேலை.. சீமான் நான் களத்தில் இருக்கேன் விஜய் கட்சியை கலைச்சிடலாம்🔹 பிறர் கண்களை பார்த்து பேசினால் கர்மா Transfer ஆகுமா

சிந்து நதி நீர் வேணும் இந்தியாவிடம் கெஞ்சிய ஷெரீப்.. கண்டும்காணாமல் இருந்த உலக தலைவர்கள்

sindhu nadhi neer latest news

சிந்து நதி நீர் வேணும் இந்தியாவிடம் கெஞ்சிய ஷெரீப்.. கண்டும்காணாமல் இருந்த உலக தலைவர்கள்ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடந்தது பிரதமர் மோடி, புதின் உட்பட பல உலக தலைவர்கள் ஒன்றுகூடினார்கள். ஆனால் இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக மறைமுகமாகப் பேசினார். இந்தியாவின் பெயர் மட்டும் சொல்லவேயில்லை என்றாலும் நீர் ஒப்பந்தங்கள் குறித்து அவர் மறைமுகமாகப் பேசியது இப்பொது பேசுபொருளாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலால் 26 பேர் மாய்ந்தனர். இந்த ஒரு நிகழ்வை தொடர்ந்து, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா உடனடியாக நிறுத்தி உத்தரவிட்டது. எதிரி நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் உட்படப் பல மாகாணங்கள் சிந்து நதி நீரை நம்பியே இருக்கிறது.

விவசாயத்திற்கும் முக்கியமாக பயன்படுத்தப்படும் இந்த நீர் மிக முக்கியமானது அப்படியிருக்கும்போது திடீரென நதி நீர் தடைப்பட்டால் அது பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய சவாலை உண்டாக்கும் இது அவர்களை பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா மீண்டும் பின்பற்ற வேண்டும் என பாகிஸ்தான் தலைவர்கள் கோரிக்கை வைத்துவருகிறார்கள்.

இந்த நிகழ்வு பாகிஸ்தான் அதட்டி பார்த்தது கெஞ்சியும் பார்த்தது.. இருப்பினும் இந்தியா தனது முடிவை மாற்றுவதாக இல்லை. பாகிஸ்தான் தீவிரவாத செயல் கடுமையாக ஒழியும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வராது என இந்தியா திட்டவட்டமாக இருக்கிறது.

இதன்நடுவில் நேற்று நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் சிந்து நதி தண்ணீர் ஒப்பந்தம் குறித்து மீண்டும் மறைமுகமாக பேசியிருந்தார். தியான்ஜினில் மாநாட்டில் பேசிய பாக் ஷெபாஸ் ஷெரிப், நீர் பகிர்வு ஒப்பந்தங்கள் உட்பட அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் எல்லா செயல் நாடுகளும் மதிக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

ஷெரீப் பேசியது :

பாக். பிரதமர் ஷெரீப் பேசிய முக்கிய பேச்சுக்கள். “ஷாங்காய் ஒருங்கிணைப்பு அமைப்பின் உறுப்பு பிற நாடுகளும் இருதரப்பு ஒப்பந்தங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

இதர நாட்டுக்கு இடையே இருக்கும் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் மூலம் நீருக்கான தாயில்லாத அனுமதிகளை வழங்கியே ஆகவேண்டும்” என பேசினார். அவர் அடுத்தடுத்து பேசுகையில் நேரடியாக இந்தியா என்ற பெயரை ஒரு வரி ஒரு வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை என்றாலும் கூட அவர் இந்தியாவைத் தான் குறிப்பிட்டு சொல்கிறார் என்று அரசியல் பிரமுகர்கள் கூறுகிறார்கள்.

அதேநேரம் சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் தலைவர்கள் பேசுவது இது முதல்முறை இல்லை. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ, இந்தியா பாகிஸ்தானின் நீர் விநியோகத்தைத் துண்டித்தால் நதிகளில் ரத்தம் பாயும் என்று சவடாலாக பேசியிருந்தார்.

பிரதமர் மோடி எடுத்த முடிவு :

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் பயன்படுத்தும் திட்டம் எதுவும் இந்தியாவுக்கு இல்லை. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆணித்தனமாக கூறிவிட்டனர். குறிப்பாகப் பிரதமர் மோடி, கடந்த மாதம் சொன்னது, “சிந்து நதிநீர் ஒப்பந்தம் நேருவின் மிகப் பெரிய தவறு என்று பேசினார்.

இந்திய விவசாயிகளுக்கு இதுல துளி கூட இடமில்லை.. இந்தியா எதிரி என்று வெளிப்படையாக தன்னை சொல்லிக்கொள்ளும் ஒரு நாட்டிற்கு 80 சதவீதத் தண்ணீரை அவர்கள் கொடுத்துவிட்டார்கள். மேலும் அடுத்தடுத்த அரசுகளும் இந்த தவறை சரிசெய்யவில்லை” என்றார். 1960இல் உலக வங்கியால் சரமசம் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆகிய கிழக்கு நதிகளின் மீது இந்தியாவிற்கு உரிமைகள் கொடுக்கப்பட்டன.

அதே நேரத்தில், சிந்து, ஜீலம் மற்றும் செனாப் உட்பட பெரிய பங்களிப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இதைத் தான் வரலாற்றுத் தவறு என்றும் இதன் காரணமாகவே இந்திய விவசாயிகள் பாதித்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். குருதியும் நீரும் ஒன்றாகப் பாய முடியாது என்பதைத் நாங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டதாகவும் பேசினார் மோடி.

ஏலியன் வருகை பாபா வாங்கா சொன்ன தகவல்

Viewed:

மேலும் பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள

📢 23,000 subscribers

கருத்துகள்

இதுவரை கருத்துகள் இல்லை. உங்கள் கருத்தை பதிவு செய்யவும்!

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்