விஜய் திமுகவை எதிர்த்தால் விசிக தாண்டி தான் போகணும் யாராகஇருந்தாலும் விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன், இன்றைய அரசியல் சூழலைப் பற்றி கருத்து தெரிவித்தார். “இன்றைக்கு ஒவ்வொருத்தனும் தானே ஹீரோ என நினைக்கிறார்களே. 1977ம் ஆண்டின் அரசியல் சூழலும், 2026ம் ஆண்டின் சூழலும் வேறுபட்டவை” என்று அவர் கூறினார். இன்றைய தலைமுறை அரசியல் விழிப்புணர்வில் முன்னேறியவர்கள், பழைய அரசியல் வாதிகளை விடவும் குறிவைக்கும் திறன் அதிகம் கொண்டவர்கள்.
கடந்த பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் நபர்களையும் மக்கள் திறம்பட விமர்சிக்கின்றனர். தமிழகத்தில் அரசியல் ஈடுபாடு, விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது இந்தசூழலில் திரைபட புகழ்பெற்ற நடிகர்கள் ரசிகர்கள் கூட அதிக கூட்டத்தை ஏற்படுத்தலாம், ஆனால் அது நேரடியாக ஆட்சியை வழங்காது ஓட்டாக மாறாது என்று கூறினார். ஆந்திராவில் பவன் கல்யாண் போல, தமிழ்நாட்டில் விஜயகாந்த், விஜய் போன்ற பிரபலங்கள் ரசிகர்களைக் கவரலாம், ஆனால் அது அரசியல் அதிகாரத்திற்கு நேரடியாக மாற்றம் தருமா என்பது சந்தேகம்.
விஜய் திமுகவை எதிர்த்தால் விசிக தாண்டி தான் போகணும் யாராகஇருந்தாலும்
முக்கியமாக, சமீபத்திய “விஜய் மாநாடுகள்” கருத்துமிக்க அரசியல் விவாதம் இல்லாமல் வெறும் கூச்சல் மற்றும் சவடால்கள் மாறாக இருந்தது. MGR காலத்துடன் ஒப்பிடும்போது, இன்றைய சூழல் மாறியுள்ளது; இன்றைய மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்தையும், அவர்களே ஹீரோ என்று உணர்கிறார்கள். ஒருவர் தமிழ் தேசியம் என்று பேசி ஒருவர் நாடகமாடுகிறார். இன்னொருபக்கம் விஜய் கத்தி கத்தி பேசி அசிங்கப்பட்டு கொண்டிருக்கிறார்.
விஜயை தோற்கடிக்க சீமான் போதும் இத படிங்க..
திமுகவை எதிர்க்க யாராலயும் முடியாது அந்த கோட்டையை உடைக்க முடியாது, உடைக்க வந்தால் விசிக தாண்டி தான் போகணும் எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்