KingwoodsNews Logo

📂 பகுப்புகள்

🔴 Live 🔹 பிறர் கண்களை பார்த்து பேசினால் கர்மா Transfer ஆகுமா🔹 விஜய் திமுகவை எதிர்த்தால் விசிக தாண்டி தான் போகணும் யாராகஇருந்தாலும்🔹 விஜய் மாநாடு டம்மி – என் மாநாடு இந்த உலகமே பாக்கபோகுது.. சீமான் சொன்ன முக்கிய தகவல்🔹 விஜயகாந்த் முன்னாடி என் மகன் விஜய் ஒருஆளே இல்ல அவன் டம்மி.. உடைத்த SAC நடந்தது இதுதான்..🔹 உதயநிதி பதவிக்கு சிக்கல் அடிமடியில் கைவைத்த அமிட்ஷா என்ன நடந்தது..🔹 அமிட்ஷா வருகை விஜய்க்கு வந்த தலைவலி.. கூட்டணி பெரிய மாற்றம்🔹 விஜய் மாநாடு கூட்டத்தால் ஆடிப்போன திமுக என்ன நடந்தது தெரியுமா..!🔹 விஜய்க்கு எதிராக சட்டமன்றத் தேர்தலில் போட்டியில்லை – சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம்?🔹 விஜயகாந்தை காப்பி அடிக்கும் விஜய் – பிரேமலதா கொடுத்த ஷாக் பதில்🔹 திமுக 4 வருட ஆட்சியில் ஈர்த்த முதலீடு ரூ.11 லட்சம் கோடி மேல் எப்படி தெரியுமா..?

அன்புமணி தனிக்கட்சி.. ராமதாஸ் எடுத்த முடிவு பாமக கட்சி யாருக்கு தெரியுமா..!

அன்புமணி இப்படி செய்யலாமா ராமதாஸ் சொன்ன முக்கிய குறியீடுகள்

அன்புமணி தனிக்கட்சி.. ராமதாஸ் எடுத்த முடிவு பாமக கட்சி யாருக்கு தெரியுமா..! தேர்தல் நெருங்கிவிட்ட சமயத்தில் பல பரபரப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் இப்பொழுது பாட்டாளி மக்கள் கட்சியில் பெரும் அதிர்ச்சி கிளப்பியிருக்கிறது இந்த காணொளி தான் இப்பொழுது வைரலாகி கொண்டிருக்கிறது அது என்னவென்றால் மருத்துவர் ராமதாஸ் அவர்களை செய்தியாளர் பேட்டி எடுத்துள்ளார் அந்த பேட்டியில் பல தகவல்களை தெரிவித்திருக்கிறார் ராமதாஸ் அதை முழுமையாக இப்பொழுது கீழே பார்க்கலாம்.

மருத்துவர் ராமதாஸ் அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது என் பேரன் அன்புமணியின் அக்கா மகனுக்கு ஒரு பதவியை வழங்கினேன் அந்தப் பதவியை வாங்கிய சந்தோஷத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற முதல் படியிலேயே அன்புமணிக்கு மொபைல் மூலம் தொடர்பு கொண்டு மாமா இந்த பதவியை நான் ஐயாவிடம் பெற்றுக் கொண்டேன் என்று போன் செய்தார் அதற்கு அன்புமணி அதை ஏன் பண்ண உடனடியா ராஜினாமா செய் என்று அதட்டி இருக்கிறார் மனம் நொந்த எனது பேரன் ஐயா அன்புமணி அவர்கள் இவ்வாறு கூறுகிறார் என்று என்னிடம் சொன்னார் நான் ராஜினாமா எல்லாம் நீ செய்ய வேண்டியது இல்லை நீ போ நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டேன்.

இதேபோல் முன்பு ஒரு சம்பவம் நடந்தது ஒரு செய்தியாளர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கிறது அதில் வன்னியர் சங்கத் தலைவர் குரு அவர்கள் உள்ளே வர வந்து கொண்டிருக்கிறார் உடனடியாக அன்புமணி அவரை ஏன் இங்கு வரவச்சீங்க அவர் இங்கு உள்ள வரக்கூடாது அவர் இங்கு வந்தார்னா செய்தியாளர்கள் எல்லாம் வேற மாதிரி ஜாதி கட்சியென்று எழுத ஆரம்பிச்சிடுவாங்க அதனால அவரு எல்லாம் உள்ளேயே இருக்க கூடாது என்று அவரை சொல்லவே அவரும் மனம் நொந்து வீட்டிற்கு திரும்பி சோகமாக போயிட்டாரு, நான் ஒரு நான்கு பேரை அழைத்து அவரிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று குரு வீட்டிற்கு அனுப்பினேன் அவர்களும் மன்னிப்பு கேட்டார்கள் இதுபோல பல நிகழ்வுகளை சொல்லலாம் அன்புமணி செய்தது இப்பொழுது சொந்த அப்பாவையே ஒட்டு கேட்கும் நிலைமைக்கு மகன் வந்துள்ளான் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்னவென்றால் நான் அமரும் இடத்தில் சோபாவிற்கு நடுவில் ஒரு அடி உள்ளே லண்டனில் வாங்கிய ஓட்டு கேட்கும் கருவியை அவர் பொருந்தியிருக்கிறார் என்னை ஒட்டு கேட்டு என்ன வரப் போகிறது என்று எனக்கு தெரியவில்லை உலகத்திலேயே தந்தையை ஒட்டுக்கேட்ட மகன் அன்புமணிதான்.

அன்புமணி தனிக்கட்சி.. ராமதாஸ் எடுத்த முடிவு பாமக கட்சி யாருக்கு தெரியுமா..!

எனது மகள் வீட்டிற்கு வந்து ஏன் என் மகனை இப்படி செய்கிறாய் என்று தலையில் அடித்துக் கொண்டு தலையே வீங்கும் அளவிற்கு அழுதார்கள் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது எனக்கு மன வருத்தமாக இருந்தது அன்புமணியே அவ்வாறு செய்கிறார் என்று எனக்கு புரியவில்லை அவருடைய அக்காவிடமே அன்புமணி நீ குடும்பத்தை இரண்டாகப் பிரிச்சிட்ட என்று சண்டையும் போட்டு இருக்கிறார் அதற்கு திரும்பவும் மன்னிப்பும் கேட்டிருக்கிறார் இதுவரை மூன்று முறை மன்னிப்பு கேட்டிருக்கிறார் ஒருநாள் அன்புமணி வீட்டிற்கு வந்தார் ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டதற்கு நான் என் அம்மாவை சந்திக்க வந்தேன் என்று கூறினார். நான் எதுவும் பேசாமல் உள்ளே சென்று ஒரு வாலி நிறைய தண்ணீர் எடுத்து என் தலையில் முழுவதுமாக ஊற்றி சாப்பிடாமல் உள்ளே சென்று படுத்துவிட்டேன் நான்கு மணி நேரம் அன்பு மணி இருந்தார் நான் எதுவும் பேசவும் இல்லை சாப்பிடவும் இல்லை அவர் சென்றவுடன் வந்து சாப்பிட்டு படுத்துக் கொண்டேன்.

ராமதாஸ் அறையில் ஒட்டுக்கேட்கும் கருவி அன்புமணி நிஜ முகம் வெளிவந்தது

அன்புமணி இருந்த பதவியில் அக்கா மகன் இருப்பது ஒரு பெருமை தானே இதில் என்ன இருக்கிறது அன்புமணி அவரது மனைவி சௌமியா அன்புமணி என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்டு நடக்கிறாரே தவிர எது நல்லதோ அவர் அதை செய்வதில்லை நான் சொல்வதை அறவே செய்வது இல்லை அவர் இப்பொழுது மக்களை சந்திக்கிறேன் என்று கிளம்பி இருக்கிறார் தலைவர் பதவியும் கிடைத்தது இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டு இருந்தார் அவர் மக்களை சந்திக்காமல் வீட்டிலேயே சாப்பிட்டு நன்றாக உறங்கி விட்டு இப்பொழுது நான் மக்களை சந்திக்கிறேன் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் நான் பல கிராமங்களை வெறும் கால்களில் சுற்றி கட்சியை வளர்த்து இந்த நிலைமைக்கு கொண்டு வந்தால் இவர் சாப்பிட்டு விட்டு வீட்டிலேயே படுத்துக்கொண்டு இப்பொழுது மக்களை சந்திக்கிறேன் இங்கு சந்திக்கிறேன் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் நான் பொதுக்குழு கூட்டம் தேதியை அறிவித்தவுடன் அவசர அவசரமாக நான் அறிவித்த தேதியை விட ஒரு வாரத்திற்கு முன்பே பொதுக்குழுவை அறிவித்திருக்கிறார் அன்புமணி நிறுவனர் இல்லாமல் பொதுக்குழு செல்லாது என்பது அன்புமணிக்கு தெரியாதா என்ன என்பது எனக்கு தெரியவில்லை.

நான் என்னை யாராவது சந்திக்க கட்சி தொண்டர்கள் விரும்பினாலும் அவர்களை அன்புமணி சௌமியா போன் செய்து அவர்களை பணம் கொடுத்து அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்துகிறார்கள் நான் செய்த தவறு குடும்ப கட்சி தொடங்கும் பொழுது குடும்ப உறுப்பினர்கள் வாரிசுகள் குடும்ப பெண்கள் யாரும் கட்சிக்கு பதவியில் இருக்கக் கூடாது என்று சொன்னேன் எப்படியோ அது நிகழ்ந்துவிட்டது அந்த தவறால்தான் அன்புமணி பிரச்சனையும் வந்துள்ளது என்று நான் நினைக்கிறேன் என்று அதில் கூறினார்.

அன்புமணி தனிக்கட்சி :

anbumani latest speech pressmeet

நான் அன்புமணியிடம் பலமுறை கூறியிருக்கிறேன் நீ ஒரு புதிய கட்சி ஆரம்பித்து உன் இஷ்டம்போல செயல்படலாம் நானும் அதற்கு வாழ்த்தும் தெரிவித்து போஸ்ட் போடுகிறேன். நீ அந்த கட்சியை உன் இஷ்டம் போல் நடத்தலாம் எனது அனுமதி எதுவும் உனக்கு தேவையில்லை என்று இதுவரை மூன்று நான்கு முறை அன்புமணி இடம் நான் இதை தெரிவித்து இருக்கிறேன் அவர் புதிய கட்சி தொடங்காமல் நான் கஷ்டப்பட்டு வளர்த்த இந்த கட்சியை அவர் ஆக்கிரமித்து அபகரிக்க பார்ப்பது தவறான ஒன்று இது மக்களுக்கான கட்சி அன்புமணியின் கட்சி இது இல்லை இதுவரை 14 பஞ்சாயத்துக்களை அன்புமணி வைத்துள்ளார் இந்த 14 பஞ்சாயத்துக்களை பேச 14 நபர்கள் வந்துள்ளார்கள் 14 நபர்களும் என்னிடம் பேசி விட்டு சென்றுள்ளார்கள் ஒரே மாதிரியாக 14 நபர்களும் பேசுகிறார்கள் இது அன்புமணி அனுப்பினாரா என்ன என்று எனக்கு தெரியவில்லை ஒரு பாடம் எடுத்து விட்டு செல்கிறார்கள் இது நான் சற்றும் நினைக்கவில்லை அன்புமணி ராமதாஸ் இவ்வாறு செய்வதை நிறுத்த வேண்டும்.

அன்புமணியின் செயலால் குடும்பமே இரண்டாகப் பிரிந்து இருக்கிறது வீட்டிலேயே ஒரே அழுகை சச்சரவுகள் தான் போய்க்கொண்டிருக்கிறது வயசாகிவிட்டது நீ பேரன் பேத்திகளிடம் இரு என்று இதுவரை யாரும் என்னிடம் கூட கூறவும் இல்லை ஏனெனில் 94 95 வயது வரை கலைஞர் அவர்களே வீல்சேரில் படுத்து கொண்டே அவர் பதவியில் இருந்தார் இது மாதிரி பல உதாரணங்கள் உலகெங்கும் கூறலாம் இந்த வயதில் உங்களுக்கு கட்சி எதற்கு என்று யாரும் கூற முடியாது அதனால் நான் என்ன மக்களுக்கு நன்மையளிக்குமோ அதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன் அன்புமணி அதை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என்று செய்தியாளர் நேர்காணலில் ராமதாஸ் அவர்கள் கூறினார்.

தமிழகத்தில் ரூ.16,000 கோடி முதலீடு – புதிய EV கார் கம்பெனி பல்லாயிரம் வேலைவாய்ப்பு.. ஸ்டாலின் அசத்தல்

அன்புமணி அவர்கள் கட்சியை வளர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால் எப்பொழுதும் அவர் முன் வந்திருப்பார் பல உதாரணங்கள் இருக்கின்றன அவர் பொறுப்பு வாங்கியதில் இருந்து தலைமை பொறுப்பு தலைவர் பொறுப்பு வாங்கியதிலிருந்து அவர் மக்களுக்கு என்ன செய்தார் வீட்டில் உணவு உண்டு அமைதியாக படுத்துக்கொண்டு தான் இருந்தார் அவர் மக்களுக்காக என்ன செய்தார் எந்த கிராமங்கள் சென்றார். வீட்டிலேயே இருப்பது தவறு மக்களுக்காக இறங்கி நான் பல கிராமங்களுக்கு நடந்தே சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டு வளர்த்த இந்த கட்சியை அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நான் பார்த்து வளர்ந்த உறவு பையன் கட்சி பொறுப்பில் இருக்கும் ஒரு வழக்கறிஞர் என்னை ராமதாஸ் என்று கூறுவது வருத்தமளிக்கிறது அவர் நான் வாங்கிய டாக்டர் பட்டத்துடன் டாக்டர் ராமதாஸ் மருத்துவர் ராமதாஸ் என்று குறிப்பிட்டால் கூட விட்டுவிடலாம் வெறும் ராமதாஸ் என்று அன்புமணியை பக்கத்தில் வைத்துக் கொண்டு ராமதாஸ் என்று முழங்கி எண்ணெயே பெயர் வைத்து கூப்பிடும் அளவிற்கு வந்துள்ளார்கள் என்றால் பணம் அன்புமணியின் ஆட்டம் அதன் வெளிப்பாடு அவர்கள் எந்த அளவிற்கு என்னை பற்றி கேவலமாக பேசி இருப்பார்கள் என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் முழுவதுமாக எனக்கு எதிராக அன்புமணி அவரை சுற்றி இருப்பவர்கள் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள் இவ்வாறு அந்த நேர்காணலில் கூறினார்.

நடிகை மீனாவுக்கு Yes.. ஓ.பன்னீர் செல்வத்துக்கு NO.. விரட்டிய நைனார் நாகேந்திரன் அதிர்ச்சி பின்னணி..!

Viewed:

மேலும் பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள

📢 23,000 subscribers

கருத்துகள்

இதுவரை கருத்துகள் இல்லை. உங்கள் கருத்தை பதிவு செய்யவும்!

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்